Latest News :

மீண்டும் நயன்தாரா, ஜெய் இணையும் படம் தொடங்கியது
Tuesday July-12 2022

‘ராஜா ராணி’ படம் மூலம் இணைந்த நயன்தாராவும், ஜெய்யும் மீண்டும் இணைந்துள்ளனர். நயன்தாராவின் 75 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். ஜீ ஸ்டுடியோஸ் ,டிரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. 

 

இப்படம் குறித்து இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா கூறுகையில், “எனது முதல் படத்தை ZEE Studios, Trident Arts ஆகிய இரண்டு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக, உணர்கிறேன். நாயகியை மையமாக வைத்து நகரும் இந்தக்  கதையில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது . இது அவரது 75வது படம் என்பதால், அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை  காப்பாற்றுவதில் நான் மிகுந்த கவனத்துடன்  உள்ளேன். திரைப்படத் உருவாக்கத்தை கற்று தந்த எனது குரு, என் ஆன்மா இயக்குனர் ஷங்கர் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.” என்றார்.

 

இந்த திரைப்படத்தில் இணைந்தது  குறித்து ZEE Studios தென்னக தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால் கூறுகையில், ”லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் இந்த மதிப்புமிக்க படத்தில் நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருபது ஆண்டுக்கு மேலாக திரைத்துறையில் பார்வையாளர்களை மகிழ்வித்து வரும் நயன்தாரா உடைய நடிப்பில் , திறமையான நிலேஷ் கிருஷ்ணாவால் இயக்கப்படும் இந்தத் திரைப்படத்தை வழங்குவது எங்களுக்கு பெருமை. Zee Studios ல், மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் சிறந்த கதைகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்.  இந்த படம் அதில் ஒரு சிறந்த  படியாக அமையும்.” என்றார்.

 

Nayanthara 75

 

கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். அவர்கள் பற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

 

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் கலை இயக்குநராக ஜாக்கி பணியாற்றுகிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்ய அனு வர்தன் மற்றும் தினேஷ் மனோகரன் ஆடை வடிமைப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

Related News

8373

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery