Latest News :

’உறியடி’ விஜய் குமார் - ’சேத்துமான்’ இயக்குநர் கூட்டணி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Tuesday July-12 2022

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் புதிய படத்தை ‘உறியடி’ புகழ் இயக்குநரும் நடிகருமான விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

 

கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல் கலந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

Sethuman director thamizh

 

விஜய் குமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். திலீபன், பாவல் நவகீதன், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வஸந்தா இசையமைக்கிறார். சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்ய, ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஏழுமலை கலை இயக்குநராக பணியாற்றுகிறார். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதுகிறார்.

Related News

8374

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery