Latest News :

’மஹா’ படத்திற்கு ஆதரவு கொடுத்த சிம்பு! - நன்றி சொன்ன நடிகை ஹன்சிகா
Thursday July-14 2022

ஹன்சிகாவின் 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘மஹா’. கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றம் என்றாலும் படத்தில் சுமார் 40 நிமிடங்கள் சிம்பு வருகிறாராம். அதேபோல், அவர் வரும் காட்சிகள் அனைத்தும் பேசப்படுவது போன்றும், அவரது ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும் மாஸாக வந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

 

எட்செட்டெரா எண்டர்டெயின்மெண்ட் (Etcetera Entertainment) சார்பில் மதியழகன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்கியிருக்கிறார்.

 

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வி.ஆர்.மாலில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஹன்சிகா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஹன்சிகா, “மஹா படம் எனக்கு வந்த போது, இது எனது 50 ஆவது படம் என்று நான் நினைக்கவில்லை. என் 50 ஆவது படமாக மஹா  திரைப்படம் அமைந்ததில் நான் மிகவும்  மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்து, படத்தை மெருகேற்றியுள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது. நண்பர் சிம்பு படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவருக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். படத்திற்கு உங்களுக்கு ஆதரவு தேவை.” என்றார்.

 

இயக்குநர் சீனுராமசாமி பேசுகையில், “படத்தின் டிரைலர் ஹாலிவுட்க்கு இணையாக வந்திருக்கிறது, அதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் தான். பெண் குழந்தைகளுக்கான ஒரு முக்கியமான கருத்தை முன்னெடுத்து வைக்கும் படமாக இது இருக்கிறது. இப்படியான படத்தில் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளது சந்தோசமளிக்கிறது. ஹன்ஷிகா உடைய நடிப்பு பிறரை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. அவருக்கு எனது பாராட்டுகள். படம் நிச்சயம் வெற்றியடையும்.” என்றார்.

 

நடிகர் தம்பி ராமையா பேசுகையில், “இந்த படத்தின் கதை தான் எங்களை ஒன்றிணைத்தது. இக்கதையை ஒத்துகொண்ட ஹன்ஷிகா தான் இந்த படத்தின் அச்சாணி. இந்த படத்தில் அவருடைய நடிப்பில், நாம் முன்னர் பார்த்த ஹன்ஷிகாவை தாண்டி, ஒரு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். நடிகர் சிம்பு இந்த படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பார்வையாளர்களுக்கு நிச்சயம்  பிடித்தமான ஒரு படமாக இது இருக்கும். இந்த படம் தயாரிப்பாளர் மதியழகனுக்கு நல்ல பெயரை  பெற்று தரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

நடிகர் ஆரி பேசுகையில், “இந்தப் படத்தில் ஹன்ஷிகா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார், அது பெருமையான விஷயம். நாயகியை  மையமாக வைத்து உருவாகும் படத்தில் பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. படத்தின் டிரைலரை பார்க்கும் போது, ஒரு கதையை ஆழமாக சொல்லியுள்ளார்கள் என தெரிகிறது. இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும்  ஹன்ஷிகா திறம்பட நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும்.  நல்ல படங்களுக்கு ரசிகர்கள்  ஆதரவு தர வேண்டும்.  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

Maha

 

நடிகர் கருணாகரன் பேசுகையில், “இந்த படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் மானசி கடின உழைப்பை கொடுத்துள்ளார். ஹன்ஷிகா இந்த திரைப்படத்தில் ஆழமான நடிப்பை வழங்கியுள்ளார். படத்தை நீங்கள் வெற்றியடைய வைக்க வேண்டும்.” என்றார்.

 

ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “சினிமாவின் மேல் பெரிய காதல் கொண்டவர்  மதியழகன், அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். இந்த படத்தின் டிரைலர் எனக்கு புலன் விசாரணை படத்தை ஞாபகப்படுத்தியது. படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் சிறப்பான பணியை செய்துள்ளனர். ஹன்ஷிகா இந்த படத்திற்காக முழு அர்பணிப்பை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் உடைய பணி இந்த படத்தில் அட்டகாசமாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மணன் பேசுகையில், “இந்த படத்தில்  விஷுவல் நன்றாக வர வேண்டுமென அதற்கு பெரிய பட்ஜெட்டையும்  தேவையான ஒத்துழைப்பு அனைத்தையும் கொடுத்தார் தயாரிப்பாளர் மதியழகன். ஹன்ஷிகா உடைய நடிப்பை கேமரா வழியாக பார்க்கும் போது, நான் அதிர்ந்து நின்றேன். அவர் இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் மானசி அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். குணசித்திர நடிகர்கள் தங்கள் நடிப்பு திறமையால் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், “இந்த படத்திற்கு இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கிய படக்குழுவிற்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இப்படத்திற்கு உங்கள் ஆதரவை  தருவீர்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள ’மஹா’ திரைப்படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

8376

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery