Latest News :

ஆஹா ஒடிடி தளத்தில் ‘மாமனினதன்’ படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு!
Saturday July-16 2022

தமிழ் மொழிக்கு என்று பிரத்யேகமான ஒடிடி தளமாக விளங்கும் ஆஹா தமிழிழ் பல புதிய மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ’மாமனிதன்’ திரைப்படம் தற்போது ஆஹ தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

 

கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள் தற்போது ஆஹா ஒடிடி தளத்தில் மாமனிதன் படத்தை பார்த்து பாராட்டி வருவதோடு இயக்குநர் சீனு ராமசாமியை தொடர்பு கொண்டும் பாராட்டி வருகிறார்கள். இதனால், இயக்குநர் சீனு ராமசாமியும், நடிகர் விஜய் சேதுபதியும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

ஒடிடி-யில் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து நேற்று படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது காயங்களோடு இருப்பவனை விரட்டி கொத்தும் காக்கையை பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பை, தங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன். நீங்கள் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்த காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு போட்ட பணம் திரும்ப வந்தால் அதுவே வெற்றி தான். திரையரங்குகளில் இந்தப்படம் நன்றாகவே போனது ஆனால் அதன் லாபம் என்பது தொக்கி நின்றது, அந்த நேரத்தில் தான் ஆஹா ஓடிடி வந்தது. அவர்களால் இன்று இப்படம் 155 நாடுகளை சென்றடைந்துள்ளது. எல்லோரும் பார்த்து பாராட்டுகிறார்கள். இதற்காக தனிப்பட்ட முறையில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். திரையரங்கில் தவறவிட்டவர்கள் ஓடிடியில் கண்டுகளிக்ககலாம். திரையரங்கில் என்ன குவாலிட்டியில் படம் இருந்ததோ அதே போல் ஓடிடியிலும் உள்ளது. தயாரிப்பாளர் யுவன் அவர்களுக்கும் நாயகன் விஜய் சேதுபதிக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “இந்தப்படத்தை திரையரங்கில் தவற விட்டவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு,  வீட்டில் இந்தப்படம் பார்ப்பவர்களுக்கு ராதாகிருஷ்ணன் நெருக்கமானவனாகிவிடுவான். மாமனிதன் குறித்து என்னிடமும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது, ஆனால் எதற்கும் நான் பதில் சொல்லவில்லை. ஒரு கதாப்பாத்திரம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் நடக்க முடியாது. நடக்க தேவையில்லை. சீனு ராமசாமி சார் போல் ஒரு படம் எடுக்க இங்கு யாரும் இல்லை. இந்தப்படம் நான் டப்பிங் பண்ணும் போது பார்க்கையில், அத்தனை உயிர்ப்புடன் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. இந்தப்படம் காலத்தால் அழியாது, காலங்கள் கடந்து நிற்கும். இந்தப்படத்தை ஆஹாவில் பார்த்து ரசியுங்கள் நன்றி.” என்றார்.

 

’மாமனிதன்’ படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் திரையரங்குகளில் வெளியிட்ட ஸ்டூடியோ 9  பிரசாத் பேசியதாவது, “ஆர்.கே. சுரேஷ் அவர்கள் ஷீட்டிங்கில் இருப்பதால் வர முடியவில்லை. மாமனிதன் ஒரு அருமையான படைப்பு. மக்கள் செல்வன், மக்கள் இயக்குநர், யுவன் ஆகியோர் தான் இந்தப்படத்தை  வெளியிட முக்கிய காரணம்.  தர்மதுரை போல் இந்தப்படத்தையும் மக்களிடம் சேர்த்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தான் ஆர் கே சுரேஷ் இந்தப்படத்தை வெளியிட்டார். திரையரங்கில் மக்கள் கொண்டாடிய ஒரு படத்தை  ஆஹா இப்போது உலகம் முழுக்க கொண்டு சேர்க்கிறது. ஆஹாவிற்கு மிகப்பெரிய நன்றி.” என்றார்.

 

தற்போது ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்தை 155 நாடுகளில் கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8378

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery