‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் பா.இரஞ்சித், அடுத்ததாக விக்ரமை வைத்து படம் இயக்குகிறார். இப்படம் நடிகர் விக்ரமின் 61 வது திரைப்படமாக உருவாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது.
‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ என இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் விக்ரம், தற்போது இயக்குநர் பா.இரஞ்சித்துடன் கைகோர்த்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘விக்ரம் 61’ என்று வைக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்.ஆர்.பிரபு, அபினேஷ் இளங்கோவன், சி.வி.குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்ய, கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனங்களை சாண்டி மேற்கொள்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு பற்றி விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...