தமிழ் இசை ஆல்பம் பாடகரா இருந்த ஹிப் ஹாப் தமிழா ஆதியை ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக்கிய இயக்குநர் சுந்தர்.சி, ‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம், ஹீரோ மற்றும் இயக்குநராகவும் மாற்றினார்.
இயக்குநர், ஹீரோ, இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று தனது அத்தனை திறமைகளை காட்டியதோடு மட்டுமல்லாமல், அதன் மூலம் ‘மீசையை முறுக்கு’ படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கிய ஆதி, தமிழக ரசிகர்களிடம் பிரபலமான சினிமா நட்சத்திரங்களில் முக்கியமானவராக உள்ளார்.
அவர் ஹீரோவாக நடித்த முதல் படமான ‘மீசையை முறுக்கு’ முன்னணி நடிகர் ஒருவரது படத்திற்குண்டான சிறப்பான ஓபனிங்கை பெற்று வசூலில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், மீண்டும் சுந்தர்.சி-யுன் ஆதி கைகோர்த்துள்ளார். சுந்தர்.சி தயாரிப்பில் புதுமுக இயகுநர் ஒருவர் இயக்கும் படத்தில் ஆதி ஹீரோவாக நடிப்பதோடு, இசையமைக்கவும் செய்கிறார். இப்படத்திற்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிற, படம் குறித்து பிற விபரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...