‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லிங்குசாமி, தற்போது ’ரன்’, ‘சண்டைக்கோழி’ என்று சில வெற்றிப் படங்களை கொடுத்தாலும், காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு திரைப்படங்களை கொடுக்காததால் தொடர் தோல்வியை தழுவினார்.
இதற்கிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய தெலுங்குப் படமான ‘தி வாரியர்’ திரைப்படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை தமிழிலும் வெளியிட்ட இயக்குநர் லிங்குசாமி இயக்குநராக படுதோல்வியை சந்தித்திருப்பதோடு, தயாரிப்பாளராகவும் இப்படத்தால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் லிங்குசாமி தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படம் இயக்குவதாக பேட்டிகளில் கூறி வருவதோடு, தனது குடும்ப தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூர்யா நடிக்க இருக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக பேட்டிகளில் கூறி வருகிறாராம்.
தோல்விப் படம் கொடுத்த இயக்குநருக்கு இத்தனை பட வாய்ப்புகளா?! என்று அதிச்சியான கேள்வி நம் மனதில் எழ, இது பற்றி விசாரிக்கையில் அதைவிட மிகப்பெரிய அதிச்சியான தகவல் ஒன்று கிடைத்தது.
தோல்விப்படத்தை கொடுத்தாலும், தனக்கு இருக்கும் கடன் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக இயக்குநர் லிங்குசாமி, சூர்யா போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து தான் அடுத்த படம் இயக்க இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறாராம்.
இந்த தகவல் அறிந்த சூர்யா தரப்பு அதிர்ச்சியடைந்ததோடு, நடிகர் சூர்யா திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திலோ அல்லது இயக்குநர் லிங்குசாமி இயக்கத்திலோ படம் எதுவும் பண்ணவில்லை, இது முழுக்க முழுக்க பொய்யான தகவல், என்று அறிவித்து வருகிறது.
ஆக, சரக்கு இல்லாத இயக்குநர் லிங்குசாமி, தப்பிப்பதற்காக பல பொய்யான தகவல்களை பேட்டிகளில் கூறி வருகிறார், என்பதை சூர்யா தரப்பு உறுதிப்படுத்தி அவரது பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...