ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்கள் படு தோல்வியை தழுவிய நிலையில், கமல்ஹாசனின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதோடு வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தியது. நடிகராக கமல்ஹாசனுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு, தயாரிப்பாளராகவும் பல கோடி லாபத்தை கொடுத்தது. இப்படி ஒரு லாபத்தை எந்த ஒரு தயாரிப்பாளரும் பெற்றதில்லை, என்று சொல்லும் அளவுக்கு கமல்ஹாசனுக்கு கோடி கோடியாய் கொண்ட வைத்தது விக்ரம் படம்.
முன்னதாக இந்த கதை ரஜினிகாக தான் லோகேஷ் கனகராஜ் எழுதினாராம். கமல் தயாரிக்க இருந்த இந்த படத்தில் நடிப்பதில் ரஜினி சற்று தயக்கம் காட்டவே கமல்ஹாசனை வைத்தே லோகேஷ் இயக்கி விட்டார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ரெடியாகிவிட்டாராம். அதே சமயம், ஒரு கண்டிஷனையும் ரஜினி போட்டுள்ளாராம்.
அதாவது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருந்த நிலையில், தானும் இந்த படத்தின் தயாரிப்பில் இணைவேன் என்று சொல்லிவிட்டாராம். காரணம், விக்ரம் படத்தால் கமலுக்கு கிடைத்த பெரும் லாபம் குறித்து அறிந்த ரஜினிகாந்த், தான் நடிக்கும் படத்திற்கும் அப்படி ஒரு லாபம் வரும், அதை நாம் சரிபாதியாக பெற வேண்டும், என்று நினைத்து தான் இப்படி ஒரு கண்டிஷனை போட்டாராம். இது ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் மீது ஏற்பட்ட பொறாமையை வெளிப்படுத்துவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
ரஜினிகாந்தின் இந்த கண்டிஷனுக்குக்கு கமல்ஹாசனும் ஒகே சொல்லிவிட்டாராம். எனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகியிருப்பதோடு, அந்த படத்தை கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...