ஹன்சிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அவரது முன்னாள் காதலர் சிலம்பரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றமாக இருந்தாலும் படத்தில் சுமார் 40 நிமிடங்கள் வரும் சிம்புவின் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளும், அதிரடி வசனங்களும் ரசிகர்களை நிச்சயம் கவரும் விதத்தில் அமைந்திருக்கிறதாம்.
‘மாநாடு’ வெற்றியை தொடர்ந்து சிம்புக்கு மற்றொரு மாபெரும் வெற்றியை கொடுக்க இருக்கும் ‘மஹா’ திரைப்படம் ஹன்சிகாவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும், என்று படம் பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள்.
இப்படத்திற்காக மிக கடுமையாக உழைத்திருக்கும் ஹன்சிகா, பல ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியை காட்டியிருக்கிறாராம். குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்காக ஹன்சிகா தொடர்ந்து 22 மணி நேரம் பணியாற்றி படக்குழுவினரை வியக்க வைத்துள்ளார்.
கொரோனா சமயத்தில் மிகுந்த சிரமத்துக்கு இடையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர் சுஜித் சங்கர், கிளைமாக்ஸில் ஹன்சிகாவுடன் மோதும் காட்சி படமாக்க திட்டமிட்ட போது தான், கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் ஊரடங்கு போடுவதற்கு முன்பு, அந்த சண்டைக்காட்சியை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, அந்த நேரத்தில் நடிகர் சுஜித் சங்கர், உடனடியாக கேரளா புறப்பட வேண்டிய சூழலும் ஏற்பட, மற்ற கலைஞர்களும் வேறு படத்திற்கு போக வேண்டி இருந்ததாம்.
இதனால், சண்டைக்காட்சியை உடனடியாக படமாக்கப்பட வேண்டும், இல்லை என்றால் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு ஆகும் என்ற நிலையில், தயாரிப்பாளரின் சூழ்நிலையை புரிந்துக்கொண்ட நடிகை ஹன்சிகா, தொடர்ந்து 22 மணி நேரம் சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறார். ஹன்சிகாவின் இந்த கடுமையான உழைப்பைக் கண்டு வியந்த படக்குழுவினர், இதுபோல் இதுவரை எந்த ஒரு கதாநாயகியும் செய்ததில்லை, என்று கூறி ஹன்சிகாவை பாராட்டியுள்ளனர்.
மேலும், இப்படத்தின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத புதிய ஸ்ரீகாந்தாக இப்படத்தில் தோன்றியிருக்கிறாராம். அதேபோல், தம்பி ராமையாவும் சிறப்பான ஒரு வேடத்தில் நடித்திருப்பதோடு, எதிர்பாராத திருப்புமுனையை ஏற்படுத்தும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.
கதைக்களம் புதிதாக இருப்பதோடு, இதுவரை நாம் பார்த்த நடிகர்களை வித்தியாசமாக காட்டப்பட்டிருக்கும் ‘மஹா’ சிம்புவுக்கு, ஹன்சிகாவுக்கும் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
யு.ஆர்.ஜமீல் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு லக்ஷ்மண் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அஞ்சு விஜய் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் சார்பில் மதிழயகன் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...