ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்து, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கிய ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது ஒடிடி தளத்திலும் அதே வெற்றியை பெற்று பல சாதனைகளை படைத்து வருகிறது.
கடந்த ஜூலை 15 ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியான இபப்டம் குறுகிய காலத்திற்குள் 2 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்துள்ளது. பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு மத்தியில், ஆர்.ஜே.பாலாஜியின் ’வீட்ல விசேஷம்’ வெளியான போதும் தற்போது ஓடிடி வெளியீட்டிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நேரத்தில் பொது பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
RJ பாலாஜி-NJ சரவணன் ஆகியோரின் இயக்கம், அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, மறைந்த நடிகை வி.எம்.சி. லலிதா மற்றும் பிற நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு இந்த படத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது. மேலும், வீட்ல விசேஷம் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு அதிரடியான வரவேற்பைக் கண்டது, மேலும் இதன் ஒரிஜினல் படைப்பான பதாய் ஹோ படத்தை விட சிறப்பாக இருப்பதாக பாராட்டப்பட்டது.
நேர்த்தியான குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளின் கலவையும் இணைந்து இந்த திரைப்படத்திற்காக பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. தவிர, ஜீ5 இல் இந்தப் படம் கிடைப்பதால், குடும்ப பார்வையாளர்கள் வீட்டிலிருந்தபடியே, வீட்ல விசேஷம் படத்தை பார்க்கவும் கொண்டாடவும் அதிக இடத்தை உருவாக்கியுள்ளது. பார்வையாளர்களின் பாராட்டுக்கள் படத்திற்கு மிகப்பெரும் விளம்பரம் அமைந்துள்ளது.
ஜீ5 அசல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள், வணிகரீதியான பிளாக்பஸ்டர்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்புகளை வழங்குவதன் மூலம் திரைப்பட ஆர்வலர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறது. ஜீ5 தொடர் வெற்றி வரிசையில் வீட்ல விசேஷம் திரைப்படமும் தற்போது இணைந்துள்ளது. ஓடிடி தளங்களின் ஜீ5 உடைய மதிப்பை உயர்த்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...