கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் ஜெயாஅம், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இணைய தொடர் ‘பேப்பர் ராக்கெட்’. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள இத்தொடர் வரும் ஜூலை 29 ஆம் தேதி ஜீ5 ஒரிஜினல் இணைய தொடராக வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பேப்பர் ராக்கெட் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிலம்பரசன், இயக்குநர் மிஷ்கின், விஜய் ஆண்டனி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி பேசுகையில், “பேப்பர் ராக்கெட் என் இதயத்திற்கு நெருக்கமான தொடர். இது எனக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்துள்ளது. படக்குழுவில் இணைந்த சினிமாவின் பெரிய நட்சத்திரங்களுடன், இந்த பேப்பர் ராக்கெட் ஒரு அற்புதமான இடத்தை வந்தடைந்துள்ளது. பெரும்பாலும், திரில்லர் வகை அடிப்படையிலான தொடர்கள் தான் ஓடிடி இயங்குதளங்களின் விருப்பமான தேர்வாக இருக்கும். ஜீ5 இந்தத் தொடரில் ஆர்வம் காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதைச் செய்ததற்காக ஜீ5 குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பாளர்களில், சிறந்த தயாரிப்பாளர் பெண்டெலா சாகர் தான். நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பால் இந்த தொடரை உயர்த்தியுள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் சிறந்த பங்களிப்புகளால் அதை அழகுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, பேப்பர் ராக்கெட்டில் ஒலி வடிவமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. தபஸ் நாயக்கின் அற்புதமான பணிக்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். பேப்பர் ராக்கெட் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.” என்றார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஜீ5-க்கு முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த தொடர் கண்டிப்பாக பெரிய வெற்றியடையும், அதற்கு எனது வாழ்த்துகள். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன். படபிடிப்பு நடக்கும் போது, கிருத்திகாவின் தனிப்பட்ட வாழ்கையில் பல சிக்கல்கள் இருந்தாலும், அதை தாண்டி இந்த தொடரை முடித்துள்ளார். கிருத்திகா இந்த கதையுடன் மிகவும் ஒன்றிணைந்துவிட்டார், அதனால் தியேட்டரில் வெளியாகும் படங்களுடன் எதிர்த்து போராடும் மனநிலையில் இருக்கிறார். OTT மற்றும் திரையரங்கு வெளியீடுகள் வேறுபட்டவை என்பதை அவர் அறிந்திருந்தாலும், தியேட்டர் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறார்.” என்றார்.
நடிகர் சிலம்பரசன் TR பேசுகையில், “முதலில் இங்கு நன்றி கூற வேண்டும், அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது உதவிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அங்கிளுக்கும், உதயநிதி அண்ணாவுக்கும் நன்றி. உதயநிதியை அணுகுவது வெகு இயல்பாக ஈஸியாக இருக்கிறது. அவர் உதவியதோடு நிற்காமல் தொடர்ந்து விசாரிப்பது பெரிய விசயம். அதற்கு நன்றி. கிருத்திகா மேடமும் நானும் முன்பே ஒரு படம் செய்வதாக இருந்தோம். எனக்கு பெண் இயக்குநர் ஆண் இயக்குநர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஆனால் இவர் ஹாபியாக செய்கிறாரோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரது உழைப்பு பிரமிப்பு தருகிறது. இருப்பினும், அவருடைய அலாதியான ஆர்வத்தையும், தீவிர உழைப்பையும் கண்டு நான் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறேன், அது இந்த வெளியீட்டில் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தொடர் அற்புதமான தொடர், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த தொடர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.
ஜீ5 சார்பில் சிஜு பிரபாகரன் பேசுகையில், “ஜீ5 உடைய தொடர்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்றுவருகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த தொடர், வாழ்வை பற்றிய புரிதல்களை கூறும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஒரு பயணம் சம்பந்தப்பட்ட தொடர். மிகச் சிறப்பாக வந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் இந்த தொடரை பார்த்து ஆதரவு தர வேண்டும்.” என்றார்.
தயாரிப்பாளர் பென்டெலா சாகர் பேசுகையில் “எனது தொழில்நுட்ப குழுவிற்கு எனது நன்றியை கூறிகொள்கிறேன். ஒரு தயாரிப்பாளராக பேப்பர் ராக்கெட் எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்துள்ளது. நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களுடைய உழைப்பால் தான் இந்த தொடர் இந்த அளவு சிறப்பாக வந்துள்ளது. தொடரை எல்லோரும் பாருங்கள், உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.
இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், “இந்த படத்தில் பெரிய அனுபவம் இருக்கிறது. இப்போதெல்லாம் படத்தில் இருக்கும் நல்ல காட்சிகளை டிரெய்லரில் போட்டு படம் பார்க்க முடியாமல் செய்து விடுகிறார்கள். அது போல் இல்லாமல் இயக்குனர் கிருத்திகா திறமையான நபர், அவருடைய திறமையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் பெரிய அனுபவங்களை கிருத்திகா பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்கிறார். தொடர் பார்க்க சிறப்பாக வந்துள்ளது. சிக்கலான திரைக்கதை அமைப்புடன் பார்வையாளர்களைக் குழப்புவதைத் தவிர்த்து, எளிமையான, நேர்த்தியான மற்றும் தெளிவான கதைகளைக் கொண்ட திரைப்படங்களையும் தொடர்களையும் அனைவரும் உருவாக்க தொடங்கினால் நன்றாக இருக்கும். இந்த தொடர் பிரம்மாதமாக இருக்கிறது, ஒட்டுமொத்த குழுவுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் பேசுகையில் “இயக்குனர் கிருத்திகா, படத்தை கதையாக வித்தியாசமாகவும், தெளிவாகவும் புரிந்துகொள்கிறார். இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்தவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இந்த தொடர் இருக்கும். ஒரு வெப் தொடர், நடிகர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். இந்தத் தொடரில் பல நடிகர்களின் திறமை விரைவில் வெளிவரும் என்று நான் நம்புகிறேன். ஜீ5 உடைய விலங்கு தொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த தொடரும் அப்படி வெற்றி அடைய படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்.” என்றார்.
நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில் “கிருத்திகா ஒரு திறமையான இயக்குநர். இந்த படத்தில் அவர் செய்திருக்கும் விஷயத்தை டிரெய்லர் மூலமாக என்னால் உணர முடிகிறது. கிருத்திகா மிகப்பெரிய இயக்குநராக எனது வாழ்த்துகள். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.
ஜூலை 29 ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள பேப்பர் ராக்கெட் தொடருக்கு தரண்குமார், சைமன் கே.கிங் மற்றும் வேத் சங்கர் ஆகிய மூன்று பேர் இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...