Latest News :

’லத்தி’ டீசர் வெளியீட்டு விழாவில் உதயநிதியிடம் கோரிக்கை வைத்த விஷால்!
Tuesday July-26 2022

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லத்தி’. இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாலம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு தமிழ் பதிப்பின் டீசரை வெளியிட்டார். மேலும், நடிகர்கல் எஸ்.ஜே.சூர்யா, நாசர், நடிகை சுனைனா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசுகையில், “லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்த படத்தில் அடி வாங்காத ஆள் இல்லை. டீஸரில் 'ஊர்ல இருக்க பொறுக்கி பொறம்போக்கு எல்லாம் என்னை போட்டு தள்ள தாண்டா தேதி குறிச்சீங்க.. இப்ப எவனும் தப்பிக்க முடியாது வாங்கடா' என்உ படத்தில் நான் பேசும் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

 

யுவனும், நானும் கிட்ட தட்ட 18 வருடங்கள் நண்பர்களாக இருக்கிறோம். என்னை பட்டி தொட்டி எங்கும் சேர வைத்தது யுவன் தான். என் முதல் படத்திற்கு யுவன் தான் இசையமைத்தார். தாவணி போட்ட பாடல் பட்டிதொட்டி எல்லாம் என்னை கொண்டு சேர்த்தது. அவர் பின்னணி இசையை சிறப்பாக அமைப்பார். அவர் சும்மா கம்போஸ் பண்ணும்போதே நான் ரெக்கார்ட் செய்துவிடுவேன். அவரின் கை விளையாடும். அவர் எங்கிருந்தாலும் அவரின் கான்சர்ட்க்கு வாழ்த்துக்கள். அவருடன் பழகிய பாக்கியம் தான் துப்பறிவாளன் 2 படத்தில் அவரின் தந்தை இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். யுவனுடைய பாடல்களும், ராஜா சாரின் பாடல்களும் நான் உட்பட தினம் தினம் கேட்காத ஆட்களே இல்லை. அந்த அளவிற்கு அவர்கள் நம் ரத்தத்தில் ஊறிவிட்டார்கள்.

 

அவன்-இவன் படத்தில் நான் நடித்த பின்பு தான் என்னுடைய நடிப்பின் மீதான மரியாதை கிடைத்தது. அந்த படத்தில் கடைசி 10 நிமிடம் பாலா சார் எனக்கு கொடுத்தார். அதே போல் இந்த படத்தில் இயக்குனர் வினோத் எனக்கு கடைசி 10 நிமிட காட்சி கொடுத்திருக்கிறார். அப்போது ரமணா மற்றும் நந்தாவிடம் 12 கேமராக்கள் வைத்துவிடுங்கள். நான் என்ன நடிக்க போகிறேன் எப்படி நடிக்க போகிறேன் என்று தெரியாது. மீண்டும் அதை நடிக்க முடியுமா என்றும் தெரியாது என்றேன். அதே போல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. இது போன்ற வாய்ப்புகள் தான் ஒரு நடிகனுக்கு மரியாதையை ஈட்டி தரும் என்றார்.

 

வழக்கமாக நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு ஏதேனும் அடிபட்டால் "இவனுக்கு தையல் போட்டு கூட்டிட்டு வர்றதே இவருக்கு வேலையா போச்சி" என்று கனல் கண்ணன் மாஸ்டரை அம்மா திட்டுவார்கள். ஆனால், இம்முறை பீட்டர் ஹெயின் மாஸ்டர் எந்த திட்டும் வாங்கவில்லை. இவன் அடிபட்டாலும் சரி செய்துவிட்டு மீண்டும் நடிக்க தான் செல்லுவான் என்று அம்மாவுக்கே ஒரு புரிதல் வந்துவிட்டது. விஜய் பாபு அவர்கள் எனக்கு இன்னொரு அப்பா. என் படத்தைப் பார்த்துவிட்டு அது எப்படி இருக்கிறது என்று முகத்துக்கு நேர் பளிச்சென்று கூறிவிடுவார் எனது தங்கை ஐஸ்வர்யா. என் ஒவ்வொரு படத்தையும் இரண்டு மூன்று முறை நான் பார்த்துவிட்டு தான் அவருக்கு காட்டுவேன். இந்த குடும்பம் உழைப்பில் தான் "லத்தி" பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருக்காது. அனைவருக்கும் நன்றி.

 

நானும் உதயநிதியும் பள்ளி படிக்கும் போதே நண்பர்கள். உதயந்தியும் ஸ்டாலின் அங்கிளும் பல வெற்றி தோல்விகளை பார்த்துவிட்டார்கள். அது அவர்களுக்கு பெரிய விஷயமே அல்ல, நான் சிறு வயதில் இருந்தே ஸ்டாலின் அங்கிளை பார்க்கிறேன். வெற்றி தோல்விகளை பார்த்தாலும் எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருப்பார். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தது, நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு அதில் கலைஞர் ஐயா பெயரும், ஸ்டாலின் அங்கிள் பெயரும் இடம் பெற வேண்டும் என்பது தான் அந்த ஆசை. விரைவில் நடிகர் சங்கம் கட்டிடம் பணிகள் முடிவடைய உள்ளது. கட்டிடம் திறக்கப்படும் போது நான் ஆசைப்பட்டது போல் ஸ்டாலின் அங்கிள் பெயரும், கலைஞர் ஐயா பெயரும் இடம்பெற வேண்டு, இதை நான் உதயநிதியிடம் இந்த மேடையில் கோரிக்கையாகவே வைக்கிறேன்.” என்றார்.

 

தயாரிப்பாளர்கள் நந்தா பேசுகையில், “நம்பிக்கை தான் எங்கள் மூவரையும் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறது. அது தான் இந்த படத்திற்கும் எங்கள் நட்பிற்கும் காரணம். பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து கொண்டிருக்கிறார். இந்த விழாவில் பூங்கொத்து பொன்னாடைக்கு ஆகும் செலவை 5 பெண் குழந்தைகளின் கல்வி செலவிற்கு கொடுக்கிறோம்.” என்று கூறி 5 பெண் குழந்தைகளுக்கு காசோலை வழங்கினார்கள்.

 

ரமணா பேசுகையில், “இவ்விழாவிற்கு அழைத்தவுடன் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. நடிகர்களாகிய நாங்கள் தயாரிப்பாளராக மாறியதாற்கு விஷால் தான் காரணம். ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் சொன்னதன் பேரில் நந்தா தான் முதலில் கதை கேட்டார். பின் நான் கேட்டேன். அதன் பிறகு விஷால் கேட்டார். வழக்கமாக விஷால் ஏதேனும் கதை பிடிக்கவில்லை என்றால் 2 மணி நேரம் வீணாகியதற்கு விஷால் எங்களை வீட்டிற்கு அழைத்து அடிப்பார். ஆனால், இந்த படத்திற்கு ஒரு நாள் கழித்து இந்த படம் தான் நான் அடுத்து நடிக்க போகிறேன். அதை நீங்கள் தயாரிக்க வேண்டுமென்றார். இந்த படத்தின் முதல் காட்சியில் இருந்தே 8 வயது பையனுக்கு தந்தையாக நடிக்கிறார். ஆகையால், ஒரு நாள் அவகாசம் எடுத்து இப்படத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அது எங்கள் ஆசையும் கூட. அதை விஷாலே சொல்லி செய்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.” என்றார்.

 

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “லத்தி சார்ஜ் படக்குழுவினர் அனைவர்க்கும் நன்றி. நான் நீண்ட காலமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் இருவரும் சுலபமாக கால்ஷீட் வாங்கி விட்டீர்கள். சரியோ தவறோ நாங்கள் இதுவரை நட்பாக இருக்கிறோம். நானும் விஷாலும் சேர்ந்து படம் பண்ண வேண்டியது. ஆனால், இது வரை நடக்கவில்லை. நானும் விஷாலும் பள்ளிக்கு ஒன்றாக சென்றோம்.. கல்லூரிக்கு ஒன்றாக சென்றோம்.. அவ்வளவுதான் .. அதற்கு மேல் சொல்ல முடியாது.

 

விஷால் இதற்கு முன்னதாக அசிஸ்டன்ட் கமிஷனர், கமிஷனர் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து தற்போது ப்ரோமோஷனில் கான்ஸ்டபிள் ஆகியுள்ளான். நான் சமீபத்தில் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் சண்டை, பாட்டு என ஏதும் இருக்காது. நான் தேர்வு செய்யும் கதையில் சண்டை இருக்காது. ஆனல் விஷால் அதற்கு நேர்மாறாக இருப்பான். இந்த படத்தில் நடிக்கும் போது விஷாலுக்கு நிறைய அடிபட்டது என கேள்விப்பட்டேன். இவ்வளவு மெனக்கெடலுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை பார்த்தல் விஷால் திரையை விட்டு வெளியே வந்து அடித்து விடுவார் போல காட்சிகள் இருக்கிறது. அவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள். அதே போல் நடிகர் சங்கம் கட்டிடத்தை விரைவில் கட்டவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். விஷால் அதை வைத்து தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

 

பாலு சார் என்னுடைய ஒளிப்பதிவாளர். அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு நடிகருடன் வேலை செய்தால் அவருடனே தான் சிறு காலம் பயணிப்பார். விஷாலுடன் இது அவருக்கு நான்காவது படம். சுனைனா ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் 'நீர் பறவை' என்ற படத்தில் நடித்திருந்தார்கள். அவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

Related News

8399

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

Recent Gallery