’நிபுணன்’ படத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை, மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குநர் இயக்குகிறார்.
வரும் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வரும் 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் மூன்று மொழிகளுக்கான போஸ்டர்களை, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் மற்றும் ராணா ஆகியோர் வெளியிட உள்ளார்கள்.
இதற்காக, இந்த மூன்று ஹீரோக்களுக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள நடிகை வரலட்சுமி, அவர்களை தனது டார்லிங் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Thankkkk u so much to my darling friends for launching the first look.. love u guys @Siva_Kartikeyan @dulQuer @RanaDaggubati @VigneshShivN pic.twitter.com/qv14nJwAui
— varu sarathkumar (@varusarath) October 2, 2017
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...