Latest News :

’வட்டம்’ எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் - சிபிராஜ் உற்சாகம்
Tuesday July-26 2022

சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ளா படம் ‘வட்டம்’. ‘மதுபான கடை’ படத்தை இயக்கிய கமலகண்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 29 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், இப்படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

நிகழ்ச்சியில் படம் குறித்து பேசிய நடிகர் சிபிராஜ், “வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். இந்த கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்த கதை ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது. இயக்குநர் கமலகண்ணன் மற்றும் கவிநயம் இந்த படத்தை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது.  இயக்குநர் கமலகண்ணன், இயக்குனர் மணிவண்ணன் போல கருத்துக்கள் கொண்டவர்.மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியா உடைய மிகப்பெரிய ரசிகன், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஜூலை 29 இந்த படம் வருகிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், “கமலகண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம்.  இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்த படம் பேசும். நடிகர் சிபி தான் இந்த கதையை எடுத்து செல்ல சரியாக இருப்பார் என நினைத்து இந்த படத்திற்குள் அவரை கொண்டு வர நினைத்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா இந்த படத்திற்குள் வந்தது மேலும் பலம். படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் இந்த படத்தை மெருக்கேற்ற பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது, பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. ஜூலை 29 இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது, அவர்களுடன் எங்களுக்கு மூன்றாவது படம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

 

Vattam

 

இயக்குநர் கமலகண்ணன் பேசுகையில், “இந்த படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கிறது. எனது முதல் படம் நிறைய வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தில் இருந்து இந்த படம்  முழுதாக வேறுபட்டு இருக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்த போது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்ய கூடி மன சுதந்திரம் கிடைத்தது. நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால்  இந்த சமூகத்தில் அதை விட  பல திரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்த திரைப்படத்திலும் இருக்கிறது. இது எங்கள் எல்லோருடைய படம். ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரை சென்றடையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை கருத்தை இந்த படம் சொல்ல முயற்சித்து இருக்கிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.

 

நடிகை ஆண்ட்ரியா பேசுகையில், “ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.” என்றார்.

 

நடிகை அதுல்யா ரவி பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த, தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. வட்டம் திரைப்படம் என் மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் கோயம்புத்தூர் பகுதிகளில் படமாக்கபட்டது. நான் நடிக்கும் முதல்  ஓடிடி படம் இது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும்.” என்றார்.

Related News

8400

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery