நடிகை அமலா பால் நடித்து தயாரித்திருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘கடவர்’. மலையாள இயக்குநர் அனுப் எஸ்.பணிக்கர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலுபிரபாகர், ஜெயராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
கடாவர்- முதுகுத்தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் மெடிக்கல் க்ரைம் திரில்லர் திரைப்படம். கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் உயரதிகாரி விஷால், தனது தலைமையில் விசாரணையைத் நடத்துகிறார். இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி குறுகிய காலத்திலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...