Latest News :

ரசிகர்கள் முன்னிலையில் வெளியாக இருக்கும் ‘விருமன்’ பாடல்கள் மற்றும் டிரைலர்!
Monday August-01 2022

‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’. 2டி சார்பில் சூர்யா தயாரிக்கும் இப்படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக  அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

இப்படத்தில் இடம்பெற்றுள்ள “கஞ்சா பூவு கண்ணாலே...” பாடல் வெளியாகி வைரலான நிலையில் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

அதன்படி, வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் விழா நடத்தி அதில் ரசிகர்கள் முன்னிலையில் ‘விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஷங்கர், நடிகர் சூர்யா, 2டி இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இருக்கிறார்கள்.

 

’விருமன்’ படத்தின் இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனக் கலைஞர்கள் நடனமாட இருக்கிறார்கள். மேலும் ஒரு பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் - பாவனி ஜோடி நடனம் இடம்பெற உள்ளது.

Related News

8413

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery