‘தொட்டுவிடும் தூரம்’ படத்தை இயக்கிய வி.பி.நாகேஸ்வரன் இயக்கும் புதிய படத்தை ஏ.எஸ்.என்டர்டெயின்மென்ட் சார்பில் எஸ்.அலெக்சாண்டர் தயாரிக்கிறார். இதில் ஹீரோவாக விக்ராந்த் நடிக்க, ஹீரோயினாக டிக்கிலோனா புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்து அதே சமயம் குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.
மாசாணி ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். கலையை தியாகராஜனும், சண்டைப் பயிற்சியை ராஜசேகரும் கவனிக்கின்றனர்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. சென்னையில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...