கடந்த பிப்ரவரி மாதம் பிரபல நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனார். பிறகு ஜாமீன் கேட்டு திலீப் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதுபோல் தொடர்ந்து நான்கு முறை நடிகர் திலீபின் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, திலீப் ஐந்தாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, பாவனாவை கடத்தி கற்பழித்த சம்பவத்தால் திலீப்புக்கு ரூ.63 கோடி லாபம் கிடைக்கும் என்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், சிறையில் சக கைதிகளிடம் கூறியதாக, கூறிய பாவனா வழக்கறிஞர், திலீபுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதாடினார்.
இந்த நிலையில், திலீப் கைதாகி 85 நாட்கள் ஆகியும் போலீசார் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததையடுத்து, அவரை ஜாமீனில் விடுவிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்து அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...