Latest News :

’கெத்துல’ படம் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கிய கன்னட ஹீரோ ஸ்ரீஜித்!
Sunday August-07 2022

‘கே.ஜி.எப்’ வெற்றியை தொடர்ந்து கன்னட சினிமாவில் உருவாகும் திரைப்படங்கள் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி வருவது ஒருபக்கம் இருக்க, கன்னட சினிமா ஹீரோக்கள் பலர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், ‘கெத்துல’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் மற்றொரு கன்னட ஹீரோ ஸ்ரீஜித்.

 

கன்னட சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் ஸ்ரீஜித் ‘கெத்துல’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகமாகிறார். வி.ஆர்.ஆர் இயக்கியிருக்கும் இப்படத்தை ஆர்.எப்.ஐ பிலிம்ஸ் சார்பில் ரெஹான் அஹமத் தயாரித்துள்ளார். 

 

ஸ்ரீஜித் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஈரீன் அதிகாரி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, ரவி காலே, வீரேந்திர சக்சேனா, சலீம் பாண்டா, குரு சந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

 

ஜீவா வர்ஷினி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகர் மற்றும் ஸ்டண்ட் இயக்குநர் பெப்ஸி விஜயன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

விழாவினில் தயாரிப்பாளர் ராஜாளி பேசுகையில், “கெத்துல மிகச்சிறப்பான படைப்பாக வந்துள்ளது. நடிகர் ஶ்ரீஜித் கேஜிஃஎப் யாஷ் போல் தோற்றமளிக்கிறார். படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெற்றால் திரையுலகம் வளரும், தொழிலாளர்கள் வாழ்வார்கள். கெத்துல கெத்தாக இருக்கிறது. இந்தக்குழு வெற்றி பெற்றால் மீண்டும் படம் தான் எடுப்பார்கள். தயாரிப்பாளர் மிகுந்த நல்ல குணம் படைத்தவர். நல்லதொரு ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். தமிழ் நாட்டில் ஹீரோக்களுக்கு 60 சதவீதம் சம்பளம் கொடுக்கும் அவலம் இருக்கிறது. இது தீர வேண்டும். இப்படி எடுத்தால் எப்படி ஓடும். தயாரிப்பாளரை வாழ வைக்காவிட்டால் சினிமா வாழாது. இந்தப்படம் போல் சின்ன படங்கள் ஓட வேண்டும், வாழ்த்துகள்.” என்றார். 

 

நடிகர் ஶ்ரீஜித் பேசுகையில், “நான் பெங்களூரிலிருந்து வருகிறேன். இயக்குநர் தன் ரத்தத்தை கொட்டி இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார். கன்னட படங்கள் செய்துள்ளேன். தமிழில் இந்தப்படம் போல் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் ஆக்ஷன், காமெடி செண்டிமெண்ட் என எல்லாமும் இருக்கிறது. இந்தப்படம் நன்றாக வந்துள்ளது எங்களை வாழ்த்தி ஆதரவு தாருங்கள், நன்றி.” என்றார்.

 

நாயகி ஈரின் பேசுகையில், “இந்தப்படம் ஒரு பான் இந்தியப்படம் எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார். 

 

Gethule

 

இசையமைப்பாளர் ஜீவா வர்ஷினி பேசுகையில், “இயக்குநர் என்னை ஒரு புரோகிராமில் பார்த்துவிட்டு என் படத்திற்கு நீங்கள் தான் மியூசிக் என்றார். இந்தப்படம் முழுதுமே டீம் ஒர்க் தான். மிக கடின உழைப்பை தந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இயக்குநர் மிக அழகாக படத்தை உருவாக்கியுள்ளார். நான் சங்கர் கணேஷ் அவர்களின் சிஷ்யை அவருக்கு நன்றி. உங்களுக்கு என் பாடல்கள் பிடிக்குமென நம்புகிறேன். இயக்குநர் V.R.R அவர்களுக்கு நன்றி.” என்றார்.

 

நடிகர் ஸ்டண்ட் இயக்குநர் பெப்சி விஜயன் பேசுகையில், “கெத்துல டிரெய்லரே கெத்தாக இருக்கிறது. நாயகன் ஶ்ரீஜித் கலக்கியிருக்கிறார். படம் பார்க்க நன்றாக வந்துள்ளது. சினிமாவில் தான் மொழிப்பிரச்சனை இல்லாமல் இருக்கிறது அதனால் தான் சினிமாவுக்கு தேசிய விருது தருகிறார்கள். இங்கு வந்துள்ளவர்கள் ரிஷி ராஜுக்காக வந்துள்ளார்கள். அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். எல்லோருக்கும் வாழ்த்துகள்.” என்றார். 

 

தயாரிப்பாளர் RFI Films சார்பில் அன்பு பேசுகையில், “இயக்குநர் V.R.R எனக்கு நெருக்கமாக தெரியும் கடுமையாக உழைக்க கூடியவர். இந்தக்குழு மிக கடினமாக உழைத்து இந்தப்படத்தை உருவாக்கியுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் பேசுகையில், “இயக்குநருக்கு மூன்று எழுத்து பெயர் V.R.R. சினிமாவில் மூன்றெழுத்து பெயரிருந்தால் பெரிய வெற்றி பெறுவார்கள். இசையமைப்பாளர் எனது சிஷ்யை, அவரை இசையமைப்பாளராக்கிய இயக்குநருக்கு நன்றி. இந்தக்குழு மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

 

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், “இந்தபடத்தில் என் பங்களிப்பு இல்லாவிட்டாலும் நட்புக்காக அழைத்தமைக்கு நன்றி. திறமையிருந்தும் அங்கீகாரத்திற்காக முயற்சிப்பவர்களின் படம் இது. இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் எல்லோரும் அங்கீகாரம் பெற வேண்டும். அண்ணன் ரிஷி ராஜ் உண்மையாய் சினிமாவை நேசிப்பவர். அவருக்கு சினிமா தவிர எதுவும் தெரியாது. இந்தப்படம் ஓடுவதற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார். 

 

அனைத்து அம்சங்களும் நிரம்பிய ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

8421

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery