சன் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியுடன் தாய்க்குலத்தால் வரவேற்கப்பட்ட ‘மங்கை’ மெகாதொடர் உட்பட 23க்கும் மேற்பட்ட மெகாதொடர்களை இயக்கிய மங்கை அரிராஜன், சத்தியராஜ் நடித்த அய்யர் ஐ.பி.எஸ்., சத்தியராஜ் மற்றும் கவுண்டமணி இணைந்து நடித்த ‘பொள்ளாச்சி மாப்பிள்ளை’, நமீதா நடித்த ’இளமை ஊஞ்சல்’ மற்றும் கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் படங்களை இயக்கி உள்ளார்.
இந்த நிலையில், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரான ஜெ. முகமது ரபி கதை எழுதி தயாரித்துள்ள ’ஒழுக்கம்’ என்ற குறும்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி மங்கை அரிராஜன் இயக்கியுள்ளார். இக்குறும்படத்திற்கு கஜாதனு இசையமைக்க, பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குறும்படம் பற்றி கூறிய இயக்குநர் மங்கை அரிராஜன், “போதைப்பொருட்களால் சீரழியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில் சரியான கவனத்தை செலுத்தி அவர்களுக்கு நல்லொழுக்கம் சொல்லிதரும் முதல் ஆசிரியர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் குறும்படம்தான் " ஒழுக்கம்". இதில் நிழல்கள் ரவி, ஜே. லலிதா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், உமாசங்கர்பாபு, சாரா, சித்ரா, வெங்கய்யா பாலன், முகமது ரபி, கீதா இன்னும் பலர் நடிச்சிருக்காங்க.” என்றார்.
இந்த குறும்படத்தின் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சுதந்திர போராட்ட தியாகியும், கம்பூனிஸ்ட் கட்சியின் மூத்த அரசியல்வாதியுமான ஆர்.நல்லகண்ணு, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்பு மிரு செஞ்சி கே.எஸ்.மஸ்தான், திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்துராமன் , நடிகரும் திரைப்பட இயக்குநருமான கே.பாக்யராஜ், கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைஞானம் ஆகியோர் கலந்துக்கொண்டு மங்கை அரிராஜன் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.
மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.
ஆர்.நல்லகண்ணு அவர்கள் ‘ஒழுக்கம்’ குறும்படத்தினை வெளியிட அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பெற்றுக்கொண்டார். மேலும், இந்த குறும்படத்தை திரையரங்குகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு சேர்ப்பார் என்று சிறப்பு விருந்தினர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
இயக்குநர் மங்கை அரிராஜன் வரவேற்புரை வழங்க பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரும், குறும்படத்தின் தயாரிப்பாளருமான ஜெ. முகமது ரபி நன்றியுரை நிகழ்த்தினார். நந்தினி விழா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...