Latest News :

’அந்த நாள்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது பெற்ற நடிகர் ஆர்யன் ஷியாம்!
Monday August-08 2022

ஆர்யன் ஷியாம் நடிப்பில், வி.வி.கதிரேசன் இயக்கியத்தில் உருவாகியுள்ள ‘அந்த நாள்’ திரைப்படத்தை க்ரீன் மேஜிக் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆர்.ரகுநந்தன் தயாரித்திருக்கிறார். 

 

நரபலி மற்றும் Black Magic-க்கை கருவாக கொண்ட இப்படத்திற்கு சிபிஎஃப்சியால் தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது. பின்னர் படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டியை அனுகி படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் பெற்றனர். இந்த தகவல் மூலம் இப்படம் கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படத்திற்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.

 

’அந்த நாள்’ படத்தில் Time Wrap, Black Magic மற்றும் நரபலியை கருவாக கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை மற்றும் அதை கையாண்ட விதத்தை பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டியுள்ளனர். 

 

இப்படத்தின் இயக்குநர் வி.வி.கதிரேசன் EUROPE FILM FESTIVAL விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும், அறிமுக நடிகர் ஆர்யன் ஷியாம் NEWYORK MOVIE AWARDS, AMERICAN GOLDEN INTERNATIONAL FILM FESTIVAL, MEDUSA FILM FESTIVAL, WORLD FILM CARNIVAL SINGAPORE உள்ளிட்ட நான்கு சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.

 

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முயற்சியால் ஈர்க்கப்பட்ட ஆர்யன் ஷியாம் அவரது ‘அந்த நாள்’ திரைப்படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார். மேலும், சமீபத்தில் பார்த்திபன் ஆர்யன் ஷியாமை வாழ்த்தி விரைவில் அவருடன் ஒரு படத்தில் பணியாற்றுவது குறித்தும் விவாதித்துள்ளார்.

 

ஆர்யன் ஷியாம் கதாநாயகனாக நடித்துள்ள ‘அந்த நாள்’ படத்தில் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ்.பாபு கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்யன் ஷியாம் எழுத வி.வி.கதிரேசன் வசனம் எழுதி இயக்கியுள்ள ‘அந்த நாள்’ திரைப்படம் இதுவரை 8 சர்வதேச விருதுகளை வென்றிருப்பதோடு, மேலும் பல விருதுகளை வெல்லும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

8424

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery