Latest News :

சிறந்த ஆசிய திரைப்படமாக விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ தேர்வு!
Tuesday August-09 2022

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘மாமனிதன்’ திரைப்படம் தற்போது ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆஹா தமிழ் ஒடிடி தளம் மூலம் மாமனிதன் திரைப்படத்தை பார்த்துள்ளனர். இதன் மூலம் ஒடிடி தளத்தில் புதிய சாதனை படைத்த ‘மாமனிதன்’ திரைப்படம் தற்போது ஆசியாவின் சிறந்த திரைப்படம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

 

ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் 'டோக்கியோ திரைப்பட விருது' எனும் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் ஒருங்கிணைந்து வழங்கும் இந்த 'டோக்கியோ திரைப்பட விருது' சர்வதேச அளவிலான கலைஞர்களின் சிறந்த விருதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான டோக்கியோ திரைப்பட விருது , ஆசியாவின் சிறந்த படமாக 'மாமனிதன்' தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது.

 

'யதார்த்த வாழ்வியல் இயக்குநர்' சீனு ராமசாமி இயக்கத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவான 'மாமனிதன்' திரைப்படம், கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடத்தில் பேராதரவையும், பெரும் வரவேற்பையும் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற 'மாமனிதன்', திரை அரங்குகளில் வெளியான குறுகிய காலகட்டத்தில் ‘ஆஹா’ ஓ. டி. டி. எனப்படும் ஆஹா டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி, ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையை படைத்தது. இப்படம் வெளியானவுடன் ஏராளமான சர்வதேச விருதுகளை 'மாமனிதன்' பெறுவான் என திரையுலகினர் கணித்தனர். அதற்கேற்ற வகையில் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று வரும் 'மாமனிதன்', தற்போது டோக்கியோ திரைப்பட விருதையும் வென்று புதிய சாதனையப் படைத்திருக்கிறது.

 

சிறந்த திரில்லர், சிறந்த ஆக்சன், சிறந்த நகைச்சுவை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் தகுதியான  படைப்புகளையும், திறமையான கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதும், பதக்கமும் வழங்கி கௌரவித்து வரும் டோக்கியோ திரைப்பட விருதுகளில், இந்த ஆண்டு ஆசியாவில் வெளியான திரைப்படங்களில் சிறந்த படமாக 'மாமனிதன்' திரைப்படத்தை தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பித்து இருக்கிறது.

 

டோக்கியோ திரைப்பட விருதை வென்ற மாமனிதன் பட குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாமல் ஏனைய இந்திய திரை உலகினரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள். இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்களும் இணையத்தில் வைரலாக்கிக் கொண்டாடி வருகிறார்கள்.

Related News

8428

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery