Latest News :

’லைகர்’ படத்தை இந்தியா முழுவதும் ரசிப்பார்கள் - நடிகர் விஜய் தேவரகொண்டா நம்பிக்கை
Tuesday August-16 2022

தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் கவனம் ஈர்த்துள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைகர்’. பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கியிருக்கிறார். 

 

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ள இப்படம் மிக பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என்று பல மொழிகளில் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பை தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரெஷ், தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார்.

 

படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் ‘லைகர்’ படக்குழு சென்னையில் படத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை அனன்யா பாண்டே உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

 

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில், “தமிழகத்திற்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. நோட்டா படத்தின் போது என் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. இந்தப்படம் ஒரு அற்புதமான ஆக்சன் படம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆக்சன் ரசிகர்களையும் கவரும் வண்ணம் படம் உருவாகியுள்ளது. நான் தமிழ் படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ் இயக்குநர்களுடன் பணிபுரிய ஆசை உள்ளது. பா ரஞ்சித், வெற்றி மாறன், லோகேஷ் போன்றோருடன் உரையாடி இருக்கிறேன். வரும் காலத்தில் அவர்களது படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். லைகர் பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். இது மிக அற்புதமான அனுபவத்தை தரும் நன்றி.” என்றார்.

 

Liger

 

தயாரிப்பாளர் விநியோகஸ்தர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், ”விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை அவருக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய இந்த படத்தினை நான் வெளியிடுவது பெரு மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும். இனி விஜய் தேவரகொண்டா தொடர்ந்து தமிழ்ப்படங்கள் செய்வார் என நம்புகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நாயகி அனன்யா பாண்டே பேசுகையில், “நான் உங்களை காதலிக்கிறேன். உங்களுக்காக இந்த வார்த்தைகளை  தமிழில் சொல்ல கற்றுக்கொண்டு வந்தேன். இந்தப்படம் மிகப்பிரமாண்டமான மாஸான திரைப்படம். இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும். இப்படியானதொரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. இத்திரைப்படம் மிகச்சிறப்பான அனுபவத்தை தந்தது. இப்படத்தை பார்த்து ரசியுங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இப்படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து  Puri connects நிறுவனம்  தயாரிக்கிறது. பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறார், தாய்லாந்தைச் சேர்ந்த கிச்சா ஸ்டண்ட் பணிகளை கவனித்து கொள்கிறார்.

Related News

8437

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery