தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், ’புஷ்பா’ படத்திற்குப் பிறகு தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட்டிலும் பிரபலமடைந்துள்ளார். மேலும், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் மீது இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்ற இந்திய சுதந்திரன தின விழா கொண்டாட்ட பேரணியில், இந்திய தேசியக் கொடியை நடிகர் அல்லு அர்ஜுன் ஏந்தி சென்றுள்ளார். வெளிநாடுகளில் நடைபெறும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் மிகப்பெரிய பேரணியாக கருதப்படும் இந்த விழாவில் அல்லு அர்ஜுன் பங்கேற்பதை பார்ப்பதற்காக சுமார் 5 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் கூடினார்கள்.
கிராண்ட் மார்ஷல் என்ற பட்டத்துடன் அல்லு அர்ஜுன் தேசிய கொடியை ஏந்தி பேரணியில் செல்ல, அவருடன் பல லட்சம் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் பேரணியில் பயணிக்க, அமெரிக்காவின் நியூயார்க் நகரமே ஸ்தம்பித்து போனது.
அல்லு அர்ஜுனுக்காக இத்தனை லட்சம் ரசிகரகள் கூடியதால், இந்திய நட்சத்திரமாக இருந்தவர் தற்போது உலக நட்சத்திரமாக மாறியிருக்கிறார் என்பது நிரூபனமாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...