தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டு பெற்ற படங்களில் ‘பெல்லிசூப்புலு’ மற்றும் ’ஈ நாகராணி ஏமைந்தி’ படங்கள் முக்கியமானவை. இளைஞர்களுக்கு ஏற்ற பவர்புல்லான பொழுதுபோக்கு திரைப்படங்களான இப்படங்கள் மூலம் தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் கவனம் பெற்றவர் இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம்.
மாஸ் கமர்ஷியல் படங்கள் எடுப்பதில் கில்லாடி என்று பெயர் எடுத்த இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், தற்போது தனது பாணியில் இருந்து சற்று விலகி, க்ரைம் காமெடி ஜானரில் இயக்க இருக்கும் படம் ‘கீடா கோலா’.
விஜி சைன்மா பேனரில் தயாரிப்பு நம்பர் 1 ஆக வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, நடிகர்கள் சித்தார்த், தேஜா சஜ்ஜா, நந்து மற்றும் பல இளம் இயக்குநர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ஸ்ரீபாத் நந்திராஜ், சாய்கிருஷ்ணா கட்வால், உபேந்திர வர்மா, விவேக் சுதன்ஷு மற்றும் கௌசிக் நந்தூரி ஆகியோரால் தயாரிக்கப்படவுள்ள இப்படம் 2023 ஆம் ஆண்டு பான் இந்தியா படமாக நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவாக நடைபெற்று வருகிறது. தேர்ந்தெடுக்கப்படுகிற குழுவின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...