சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி - பிரமோத் இணைந்து தயாரிக்கும் இப்படம் சூர்யாவின் 42 வது படமாக உருவாகிறது.
இந்த நிலையில், சிவா - சூர்யா கூட்டணி படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ’சூர்யா 42’ என்று வைக்கப்பட்டுள்ளது.
’சூரரைப் போற்று’, ’ஜெய் பீம்’, ‘எதற்கும் துணிந்தவன்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பல பான் இந்தியா திரைப்படங்களை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் வம்சி - பிரமோத் இணைந்து தயாரிப்பதால் படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் கமர்ஷியல் சினிமாவின் இயக்குநர் என்ற புகழை ஒவ்வொரு திரைப்படத்திலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் திரைப்பட இயக்குநர் சிவா, உலகளாவிய பார்வையாளர்களுக்கு மற்றொரு மெகா விருந்தை தரவுள்ளார். இப்படம் அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு ஒரு மாறுபட்ட படைப்பாக இருக்கும்.
இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மிலன் கலையை நிர்மாணிக்க, சுப்ரீம் சுந்தர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆதி சங்கர் திரைக்கதை எழுத, மதன் கார்கி வசனம் எழுதுகிறார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...