Latest News :

விஜய் வாங்கியதை வாங்கும் முயற்சியில் நயன்தாரா!
Thursday August-25 2022

சினிமாவில் கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் பல தொழில்களில் சத்தமில்லாமல் முதலீடு செய்வது ஒரு பக்கம் இருக்க, விலையுர்ந்த வீடுகள் வாங்குவதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், திரையுலக வியக்கும் அளவுக்கு நடிகர் விஜய் ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம். 

 

தற்போது நீலாங்கரையில் பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் விஜய், அட்டையாறில் அலுவலகம் வைத்திருக்கிறார். இந்த நிலையில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை விஜய் வாங்கியிருக்கிறார். அந்த ஒரு வீட்டின் விலை மட்டுமே ரூ.34 கோடியாம். அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு பிளாட்டை அலுவலகமாக விஜய் பயன்படுத்தி வருகிறாராம்.

 

அந்த அலுவலகத்திற்கு சென்று வந்தவர்கள், அதன் பிரம்மாண்டத்தில் உரைந்து விடுகிறார்களாம். அந்த அளவுக்கு ஆடம்பரமாக இருக்கும் அந்த பிளாட் குறித்து ஒட்டு மொத்த கோலிவுட்டே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க, இந்த தகவல் நடிகை நயன்தாரா காதுக்கு போக, அவரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்க முடிவு செய்துவிட்டாராம்.

 

தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும்  நயன்தாரா, விஜய் வாங்கியது போல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டை விரைவில் வாங்க இருப்பதாகவும், தற்போது அதற்கான முயற்சியில் அவர் இறங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Related News

8463

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery