ஜிவி பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பென்சில்’. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணி நாகராஜ். இவர் தற்போது ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தை இயக்கி வந்தார்.
விஜயின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்படத்தில் நீயா நானா கோபிநாத், அனிகா, வனிதா விஜயகுமார், சீதா, கிரிஷிகா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் இன்று காலை மரணம் அடைந்தார். இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
45 வயதாகும் இயக்குநர் மணி நாகராஜ், திரைக்கல்லூரியில் படித்துள்ளார். இயக்குநர் கவுதம் மேனனுடன் ‘காக்க காக்க’ முதல் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ வரை உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் மணி நாகராஜ் இறப்பிற்கு ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படக்குழு உள்ளிட்ட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மணி நாகராஜ் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது . இறுதி சடங்கு நாளை ஏவிஎம் இடுகாட்டில் நடைபெற உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...