விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தின் விளம்பர பணிகளில் தீவிரம் காட்டி வரும் விக்ரம், ‘கோப்ரா’ குழுவினருடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்தார். தற்போது தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோப்ரா குழுவின் பிரம்மாண்ட விழா கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோப்ரா குழுவுடன் நடிகர் ரோஷன் மேத்யூ, நடிகைகள் மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள பிரபலமான ஜெயின் கல்லூரி வளாகத்தில் 'கோப்ரா' பட குழுவினர், மாணவ மாணவிகளை சந்தித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்து உற்சாகப்படுத்தினர். சீயான் விக்ரம் தலைமையிலான பட குழுவினரின் தமிழக பயணத்தை போல், கேரள பயணமும் எதிர்பார்த்ததை விட கூடுதலான வெற்றி பெற்றதால் 'கோப்ரா' பட குழு உற்சாகமடைந்திருக்கிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
கணித புதிர்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தை பற்றி ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையில் பட குழுவினர் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...