Latest News :

பாலிவுட் பிரபலங்களின் பாராட்டு மழையில் பா.இரஞ்சித்!
Monday August-29 2022

இயக்குநர் பா.இரஞ்சித் கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘நட்சத்திரம் நகர்கிறது.’. யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், சிந்துஜா விஜி, சபீர், சார்லர் வினோத், மனிஷா தத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் காதல் எப்படி அரசியலாக்கப்படுகிறது என்பதை பேசுகிறது. மேலும், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் மட்டும் இன்றி ஓறினச்சேர்க்கை காதல் பற்றியும் இப்படம் பேசுகிறது.

 

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். பா.இரஞ்சித்தின் படம் ஏ சான்றிதழ் வாங்கியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Pa Ranjith

 

இந்த நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டார்கள். படத்தை பார்த்தவர்கள் படத்தையும், இயக்குநர் பா.இரஞ்சித்தையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

 

குறிப்பாக பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், இயக்குநர் பா.இரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். மேலும், படம் குறித்து பல பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டி வருவதால், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படக்குழு உற்சாகமடைந்துள்ளது.

 

Pa Ranjith and Anurak Kashyap

Related News

8471

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery