வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்த நிலையில், தற்போது இரண்டு பாகங்களாக ‘விடுதலை’ உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இரண்டாம் பாகத்திற்கு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ள படக்குழு, அக்காட்சிகள் சிறுமலை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தமிழில் ஒரு முழுமையான திரை அனுபவம் தரும் படைப்பாக, பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக மாறி நிற்கும் விடுதலை படம் பார்வையாளர்களிடம் பெரும் அலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் அமைக்கப்பட்ட 10-கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் இப்படத்தின் பிரமாண்டத்தை கூட்டியுள்ளது. ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அச்சு அசலாக தோற்றமளிக்க, பாலம் மற்றும் ரயிலின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அதே பொருட்களைக் கொண்டு இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிறுமலையில் ஜாக்கி தலைமையிலான கலைத்துறை ஒரு கிராமத்தினை அச்சு அசலாக உருவாக்கியது குறிப்பிடதக்கது.
தற்போது, கொடைக்கானலில் ஆக்ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த ஆக்ஷன் காட்சியை அமைக்கிறார். பல்கேரியாவில் இருந்து ஏற்கனவே தமிழகம் வந்திருக்கும் திறமையான ஸ்டண்ட் டீம் இந்த ஆக்ஷன் ப்ளாக்கில் பங்கேற்கிறார்கள்.
விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...