கல்யாண் இயக்கத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, திலீபன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘ஷூ’. நெட்கோ ஸ்டுடியோஸ் சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் ஏ.டி.எம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் திரில்லர் காமெடி படமாக உருவாகியுள்ளது.
சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகைகள் சஞ்சிதா ஷெட்டி, கோமல் சர்மா, இயக்குநர்கள் விருமாண்டி, கே.பாக்யராஜ், நக்கீரன் கோபால் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் நியாஷ் பேசுகையில், “தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பில் இயங்கியுள்ளோம். எங்களது முதல் திரைப்படமாக கல்யாண் இயக்கத்தில் ‘ஷூ’ திரைப்படம் உருவானது எங்களுக்கு மகிழ்ச்சி. அடுத்து பல திரைப்படங்களை வரிசையில் வைத்துள்ளோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை. தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம்.” என்றார்.
தயாரிப்பாளர் கார்த்திக் பேசுகையில், “இது எங்களுடைய முதல் திரைப்படம். இது குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கபட்ட கதை. இந்த படத்தை இயக்குனர் கல்யாண் மிகவும் சிரமப்பட்டு சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தை தியேட்டரில் நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுகொள்கிறேன்.” என்றார்.
நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசுகையில், ”படத்தின் தலைப்பு ஷூ என்று இருந்தாலும், இந்த படத்தின் கரு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கபட்ட இந்த கதை இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், மரியாதை கொடுப்பதும் மிக அவசியமான ஒன்று. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.
நடிகை கோமல் ஷர்மா பேசுகையில், “இது போன்ற கதைக்களத்தை உருவாக்கி அதை திரைப்படமாக மாற்றுவது மிகவும் சவாலான விஷயம், இப்படம் உருவாக தயாரிப்பாளர் தான் காரணம். சமூக கருத்துகள் கொண்ட இந்த திரைப்படத்தை எடுத்ததற்கு கல்யாண் அவர்களுக்கு நன்றி. இப்போதைய சமூகத்திற்கு தேவையான கருத்துகளை கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
இயக்குனர் விருமாண்டி பேசுகையில், “எல்லா இயக்குனருக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. இயக்குனர் கல்யாண் இது போன்ற படத்தை உருவாக்கியது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். இதுபோன்ற படங்களை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.
இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், “புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது, ஆரோக்கியமான விஷயம். இயக்குனர் கல்யாண் தயாரிப்பாளர்களுக்கான இயக்குனர். யோகிபாபுவிற்கு இப்போது அதிக வரவேற்பு இருக்கிறது. அவர் இருப்பதனாலே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியது இந்த படத்திற்கு மேலும் ஒரு பலம். அதனால் இந்த படமும் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குனர் கல்யாண் பேசுகையில், “தயாரிப்பாளர் கடின உழைப்பை கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் உடைய பங்கு மிகப்பெரியது. இந்த படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் உடைய நடிப்பு சிறப்பாக வந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நக்கீரன் கோபால் பேசுகையில், “இந்த படத்தின் கதைகரு தான் இந்த இசை வெளியீட்டிற்கு நான் வர காரணம். குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்றவை நடக்காமல் இருப்பதற்காக போராடும் நக்கீரன் சார்பில் இந்த விழாவிற்கு நான் வந்துள்ளேன். தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எடுக்க தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். சமூகத்தில் பாலியல் குற்றம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலே முதலில் எங்களிடம் தான் வருகிறார்கள் அது பற்றிய உண்மையை நாம் தான் வெளிக்கொண்டுவர வேண்டியுள்ளது. இது போன்ற திரைப்படங்கள் எடுக்க தனி தைரியம் தேவை. அந்த வகையில் இந்த திரைபடத்திற்கு எனது வாழ்த்துகள்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...