பெயரை படித்ததும் ஏதோ ஹாலிவுட் இசையமைப்பாளராக இருப்பாரோ என்று நினைக்க வேண்டாம், தமிழகத்தை சேர்ந்தவர் தான் இந்த ஜுட் லினிகர். விரைவில் வெளியாக உள்ள ‘உறுதிகொள்’ திரைப்படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகாகியுள்ள ஜுட் லினிகர், குழந்தையில் இருந்தே இசை...இசை...என்று வளர்ந்ததால், இந்த இளம் வயதில் இசையமைப்பாளர் மற்றும் பாடகரானதில் ஆச்சரியமில்லை.
ஜுடின் தந்தையும் ஒரு இசைக் கலைஞர் என்பதால், ஜுடின் கருவில் இருந்தே இசையாலே வளர்ந்திருப்பார். அப்படி இசையால் வளர்ந்தவர், எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் படித்த போதும், பள்ளி நிகழ்ச்சிகளில் தனது இசையால் அனைவரையும் கவர்ந்தவர், ஆரம்பத்தில் பியானோ கலைஞராகவும் பிறகு கீபோர்ட் (keyboard) கலைஞராகவும் பாடகராகவும் உருவெடுத்து பள்ளி பாடல் குழுவில் இடம்பெற்று பல நிகழ்ச்சிகளில் தனது திறமையை நிரூபித்தவர், பல பரிசிகளையும் பாராட்டுக்களையும் பெற்றதோடு, அப்போதே இசை குறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.
தனது ஆய்வின் மூலம், கணினிகளை கொண்டு தான் இசையமைத்த இசை கோர்வைகளை தனது இணையதளமான Reverbnation.com-ல் பதிவேற்றம் செய்த ஜுட் லினிகர், 11 ம் வகுப்பு படிக்கும் போதே விளம்பரப் படம் ஒன்றுக்கு இசயமைத்தார்.
The G7 Conglomerate என்ற விளம்பர நிறுவனம் ஜுட் லினிகரின் திறமையைப் பார்த்து, அவர் 11-ம் வகுப்பு படிக்கும் போதே, அவருக்கு இசையமைக்கும் முதல் வாய்ப்பை கொடுத்தது. பிறகு பள்ளி பொது தேர்வு நெருங்கியதால் ஒரு வருடம் இசைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தியவர், சென்னை லயோலா கல்லூரில் தனது இளங்கலை பட்டப் படிப்பை முடித்தார்.
கல்லூரியிலும் இசைக் குழுவில் ஈடுபட்டு தனது திறமையால் அசத்தியவர், புரோகிராமர் மற்றும் ஆடியோ செயலாக்க தொழில்நுட்ப வல்லுநராக பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். பிறது தனது அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்க தொடங்கியவர், பல போராட்டங்களுக்கு பிறகு, 3 ஆண்டுகள் கழித்து தனது முதல் திரைப்படத்தின் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
‘உறுதிகொள்’ என்ற படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜுட் லினிகர், தனது பாடல்கள் மூலம் அனைவரிடமும் பாராட்டை பெற்றவர், படம் ரிலிஸுக்கு பிறகு பின்னணி இசை குறித்தும் பாராட்டுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...