சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமான காதல் மற்றும் காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகி வரும் ‘காபி வித் காதல்’ படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இந்த காதல் பட்டாளத்துடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளும் இணைந்துள்ளார்கள்.
குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லும் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு சோசியல் மீடியாவில் டிரெண்டானது.
இந்த நிலையில், இப்படத்தின் தமிழக திரையங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியையும், வசூல் சாதனையையும் படைத்து வருவதை தொடர்ந்து ‘காபி வித் காதல்’ திரைப்படமும் கோலிவுட்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுந்தர்.சி படங்கள் என்றாலே அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருப்பதாலும், தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்திருப்பதாலும் ‘காபி வித் காதல்’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘காபி வித் காதல்’ திரைப்படம் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...