தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதைக்களம் மற்றும் மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் மூலம் கவனம் ஈர்த்து வரும் சிபி சத்யராஜின் தொடர் வெற்றிகளால், வியாபார வட்டாரத்தில் நல்ல பெயரை எடுத்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர், ஒரே படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்க ரெடியாகியுள்ளார்.
லதா பாபு & துர்க்கைனி ஆஃப் டுவின் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் லதா பாபு மற்றும் துர்க்கைனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கும் புதிய படத்தில் தான் சிபி சத்யராஜ் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார்.
ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் துப்பறியும் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தில் சிபி சத்யராஜுக்கு ஜோடி இல்லை என்றாலும், இப்படத்தின் திரைக்கதை 25 முக்கிய கதாப்பாத்திரங்களை சுற்றி நகரும் வகையில் வித்தியாசமான முறையில் எழுதப்பட்டுள்ளது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் சிபி சத்யராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ’வத்திக்குச்சி’ திலீப், கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் அய்யப்பா, பழைய ஜோக் தங்கதுரை, விஜய் டிவி குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
வெங்கட் ராமன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்கிறார். அருண் சங்கர் துரை கலையை நிர்மாணிக்க, சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்கிறார்.
சென்னை நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகரின் பல இடங்களில் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 5 ஆம் தேதி எளிமையான பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...