‘சொப்பன சுந்தரி’ என்ற பெயர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி - செந்தில் காமினேஷன் காமெடி காட்சியில் தோன்றிய இந்த பெயர் இன்று வரை தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த பெயர் தொடர்புடைய ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கவில்லை. அது என்ன கேள்வி என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அதற்கான பதில் தான் யாரும் அறியாதது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் புதிய ’சொப்பன சுந்தரி’-யாக மாறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆம், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படமாக இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 'சொப்பன சுந்தரி' என்ற டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
'லாக்கப்' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
கவுண்டமணி- செந்தில் தொடங்கி, இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ். ஜி. சார்லஸின் முந்தைய படத்தின் வில்லனான இயக்குநர் வெங்கட் பிரபு என இந்த பெயரை பயன்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார்கள். அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதே சமயம், செந்தில் கவுண்டமணியிடம் ‘சொப்பன சுந்தரி’ பற்றி கேள்விக்கு விடை கிடைக்குமா!, என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...