Latest News :

ஜெயம் ரவியின் ‘சைரன்’ படப்பிடிப்பு தொடங்கியது
Tuesday September-06 2022

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் ’சைரன்’ படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், அனுபமா பரமேஸ்வர் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடிக்கிறார்கள்.

 

மிகப்பிரமாண்ட பொருட்செலவில்,  குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக உருவாகும் இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிக்கிறார். 

 

காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

 

Siren Movie Pooja

 

சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் காட்சித்துணுக்கு இப்போதே படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

Related News

8496

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery