தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியாக வலம் வருபவர் கபிலன். சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கும் கபிலன், கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தில் சிறு வேடத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன், இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருமணத்திற்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட தூரிகை கபிலன் ‘பீயிங் வுமன்’ (Being Women Magazine ) எனும் இதழையும், ’தி லேபிள் கீரா’ (the label keera) எனும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...