தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
6 ஆம் தேதி கோவாவில் கிறிஸ்தவ முறைப்படி முதலில் திருமணம் நடக்க, அடுத்த நாளே இந்து முறைப்படியும் திருமணம் நடைபெறுகிறது. அதன் பிறகு ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு நடக்க உள்ளது. இதில் சினிமா பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிறகு சில நாட்கள் அமெரிக்காவில் தங்க திட்டமிட்டுள்ள திருமண ஜோடி பிறகு இந்தியா திரும்பி, தாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு, பிறகு தங்களது ஹனிமூனுக்கு செல்ல இருக்கிறார்கள்.
இதற்கிடையே, சமந்தாவின் திருமணத்திற்காக தனி விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தான் நாகர்ஜூனா குடும்பமும் மற்றும் சமந்தா குடும்பமும் கோவா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் உடை, இதுவரை எந்த திருமணத்திலும் மணமக்கள் உடுத்தாத அளவுக்கு ரொம்ப பிரேத்யமாக வடிவமைக்கப்பட்டு வருகிறதாம்.
இப்படி அனைத்திருலும் பிரம்மாண்டத்தை கடைபிடிக்கும் சமந்தா - நாக சைதன்யா திருமண செலவு ரூ.10 கோடியை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...