சமீபத்தில் ‘சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்திய முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா, பிரமோத் மற்றும் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் சூர்யா கூர்மை மிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார். டி.எஸ்.பி=யின் பின்னணி இசையும் விஷுவலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரங்களில் சுமார் 2 மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிவா இயக்குகிறார். வலிமை மிகு வீரம் எனும் அடைமொழியுடன் வரும் டைட்டில் கதையின் தன்மையை சொல்வதாக அமைந்துள்ளது.
10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பும், மற்ற விவரங்களும் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...