தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மஞ்சு விஷ்ணு, தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பல திரைப்படங்கள் மட்டும் இன்றி இசை ஆல்பங்கள், குறும்படங்கள், இணைய தொடர்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதன் முதல்படியாக தான் ஹீரோவாக நடித்திருக்கும் ‘ஜின்னா’ படத்தை தயாரித்துள்ளார்.
மஞ்சு விஷ்ணு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன், பாயல் ராஜ்புத் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடிக்க, சூர்யா இயக்கியுள்ளார். ஏவிஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரி சார்பில் மஞ்சு விஷ்ணு தயாரிக்கும் இப்படத்தை டாக்டர்.எம்.மோகன் பாபு வழங்குகிறார்.
அனுப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.நாகேஸ்வர ரெட்டி கதை எழுதியிருக்கும் இப்படத்தின் வசனத்தை கோனா வெங்கட் எழுதியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று சோசியல் மீடியாவில் டிரெண்டிங்காகி வருவகிறது. மேலும், ஏற்கனவே தொடங்கப்பட்ட புரோமோஷன் பணிகளால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டீசர் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
படம் குறித்து இயக்குநர் சூர்யா கூறுகையில், “திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் திரைப்பட வல்லுநர்களைக் கொண்டு 'ஜின்னா' படத்தை உருவாக்கியுள்ளோம். கோனா வெங்கட், எழுத்தாளர் நாகேஸ்வரர் ரெட்டி சார், சோட்டா கே நாயுடு, மஞ்சு விஷ்ணு ஆகியோரை வைத்து முதன்முறையாக நான் இயக்கியிருக்கிறேன். முதல் முறையாக மஞ்சு விஷ்ணுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். விஷ்ணு தனது இதயத்தையும் ஆன்மாவையும் படத்தில் முதலீடு செய்துள்ளார். 'ஜின்னா' திரைப்படம் பெரிய திரையில் பார்வையாளர்களுக்கு காட்சி விருந்தாக அமையும்." என்றார்.
தயாரிப்பாளரும் எழுத்தாளருமான கோனா வெங்கட் படம் குறித்து கூறுகையில், “’ஜின்னா’ படம் திரைக்கு வருவதற்கு முன்பு சொல்ல ஒரு பெரிய வரலாறு உள்ளது. படத்தின் புரொமோஷன்களில் மேலும் முன்னேறும் போது சரித்திரத்தைப் பற்றி பின்னர் விவாதிக்கலாம். தெலுங்கு திரையுலகில் எழுத்தாளராக எனது சாதனை, பொழுதுபோக்கு என்ற வார்த்தையின் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையே காரணம். நீண்ட காலத்திற்கு முன்பு விதைக்கப்பட்ட படம் 'டீ', 2007-ல் வந்தது. இண்டஸ்ட்ரிக்கு வந்தபோது 'வெங்கி' படத்துக்காக வேலை பார்த்தேன். 20 நிமிட ரயில் எபிசோட் திரையுலகில் பெரும் பாராட்டுக்களையும் கைதட்டலையும் பெற்றது. நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் தொடர்ந்து என்னை பாராட்ட அப்புறம் நான் ஏன் முழுநீள காமெடி பண்ணக்கூடாதுன்னு நினைச்சேன். அப்படித்தான் நான் 'டீ' பண்ணினேன். நடிகர் மஞ்சு விஷ்ணு என்னை ஊக்கப்படுத்தி மீண்டும் அந்த டாஸ்க்கை செய்ய எனக்குப் பின்னால் நின்றார். 'டீ' எனக்கு கதாசிரியர் என்ற அங்கீகாரத்தை தந்தது. பின்னர் 'தேனிகைனா ரெடி' படத்திலும் என்னை ஈடுபட வைத்தார்கள். இவை இரண்டும் தான் என் கேரியரை வரையறுத்த பிளாக்பஸ்டர்கள். இப்போது அந்த பட்டியலில் 'ஜின்னா' இன்னொரு பிளாக்பஸ்டர் படமாக வரப்போகிறது. நான் கவனித்தது என்னவென்றால், விஷ்ணுவுக்கு ஒரு தனித்துவமான நகைச்சுவை டைமிங் இருக்கிறது. அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்கிறார். இது போன்ற கதை அவருக்கு மிக பொருத்தமாக இருக்கும். திரையில் அவரது நடிப்பு திறமை மேம்படும். இந்த கதையை முதலில் கேட்டபோது முதலில் மனதில் பதிந்த பெயர் சன்னி லியோன். கதையில் சன்னிக்கு மாற்று இல்லை என்று ஒட்டுமொத்த குழுவும் கருதியது.” என்றார்.
பாயல் ராஜ்புத் கூறுகையில், “ஜின்னா என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம். டீசரில் பார்வையாளர்கள் பார்த்தது பனிப்பாறையின் ஒரு துளி மட்டுமே. படம் உங்கள் இதயத்தையும் உள்ளத்தையும் தொட்டுவிடும். மோகன் சார், கோனா வெங்கட் ஆகியோரது தொடர்பு நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சோட்டா கே நாயுடு, இந்தியத் திரையுலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்வார். அவர் என்னைத் திரையில் காட்டிய விதத்தை நான் காதலித்தேன். மஞ்சு விஷ்ணு மற்றும் சன்னி லியோன் திறமையானவர்கள் மட்டும் அல்ல, நல்ல மனம் படைத்தவர்கள். அவர்களின் அந்த நல்ல மனதுக்காகவும் அவர்களை நான் நேசிக்கிறேன்.” என்றார்.
நடிகை சன்னி லியோன் கூறுகையில், “காதல் ஒரு உலகளாவிய மொழி. எனக்கு இது மிகவும் புரிகிறது. ஒட்டுமொத்த படகுழ்வும் ஆச்சரியமாக இருந்தது. திரைப்படத் துறையை ஒரு குடும்பமாக நேசிக்கும் உங்களது உணர்வு அற்புதமானது. வேறு எங்கும் கிடைக்காத அத்தகைய அனுபவம் எனக்கு இந்த படத்தில் கிடைத்தது. மேலும் இந்த கதாபாத்திரங்கள் மிகவும் அற்புதமானவை. எல்லோரும் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். தென்னிந்திய சினிமாத் துறை எனக்கு மிகவும் அன்பாக இருக்கிறது. உங்கள் அன்புடன், வரும் வருடங்களில் நான் தொடர்ந்து அதிக படங்களில் நடிக்க விரும்புகிறேன்.” என்றார்.
நடிகர் மஞ்சு விஷ்ணு கூறுகையில், “இந்த அன்புக்காகவும், மரியாதைக்காகவும் தான் நடிகர்களாகிய நாங்கள் படம் எடுக்கிறோம். திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்க்கும் பார்வையாளர்கள் இல்லையென்றால், நாங்கள் நடிகர்கள் என்று யாரும் இல்லை. உங்கள் அன்பிற்காக உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். 'ஜின்னா' என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு படத்திற்கும் நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம், ஆனால் 'ஜின்னா' இன்னும் பல மைல்கற்களை தொடும்.
மேலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், என் அருமை மகள்கள் அரியனா, விவியனா தங்கள் குரலை வழங்கி படத்தில் நடித்துள்ளனர். அனுப் ரூபன்ஸுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். படத்தில் குழந்தைகளைப் பாட வைக்க வேண்டிய முக்கியமான காட்சி ஒன்று இருப்பதாக அவரிடம் கூறினோம். மிக சிறப்பாக செயல்படுத்தினார். எழுத்தாளர் நாகேஸ்வர ரெட்டிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், ஏனென்றால் என் கேரியர் வீழ்ச்சியில் இருந்தபோது, 'தேனிகைனா ரெடி' மூலம் எனக்கு வெற்றி கொடுத்தார். பிறகு தயாரிப்பாளராக நான் தயாரித்த ‘கரண்ட் தீக’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது 'ஈதோ ரகம் ஆதோ ரகம்' மீண்டும் ஒரு இனிமையான நினைவாக எனக்கு அமைந்தது.
'ஜின்னா' ஒரு அசாதாரண நகைச்சுவைத் தொடர்பைக் கொண்டுள்ளது. 'கரன்ட் தீகா' படத்தில் கலை உதவியாளராக பணியாற்றிய கலைஞர் சதாம், தற்போது 'ஜின்னா' படத்தில் எனது நண்பராக நடித்துள்ளார். அவரது பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது. கடின உழைப்பு யாரையும் தோற்கடிக்காது என்பதை இது நிரூபிக்கிறது. சம்மக் சந்திரா சிறப்பாக செய்துள்ளார். வெண்ணிலா கிஷோர் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.
மிகப்பெரிய நட்சத்திரங்களின் நடிப்பு மற்றும் அவர்களுடைய காமெடி காட்சிகள் உங்களை சிரிக்க வைப்பதோடு, குடும்பத்துடன் அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழ கூடிய நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாகவும் ’ஜின்னா’ இருக்கும்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...