Latest News :

சன்னி லியோன் ராணியாக நடித்திருக்கும் ‘ஓ மை கோஸ்ட்’! - டீசருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு
Sunday September-11 2022

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘ஓ மை கோஸ்ட்’. வா மீடியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் வீரசக்தி மற்றும் சசிகுமார் இணைந்து மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

’மாநகரம்’, ‘யார் இவர்கள்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஜாவித் ரியாஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மலையாள சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான தீபக் மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பா.விஜய் பாடல்கள் எழுத, கில்லி சேகர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். அருள் சித்தார்த் படத்தொகுப்பு செய்துள்ளார். ராம்-ரமேஷ் கலை இயக்குநர்களாக பணியாற்றியுள்ளார்கள். பிரபல பாலிவுட் நடன கலைஞர் விஷ்ணு தேவா நடன காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

‘சிந்தனை செய்’ என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்த ஆர்.யுவன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். 

 

சன்னி லியோன் முதல் முறையாக தமிழ் சினிமாவில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘ஓ மை ஹோஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு சோசியல் மீடியாவில் வைரலாகி  வருவதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.

 

படம் குறித்து இயக்குநர் ஆர்.யுவன் கூறுகையில், ”இது ரசிகர்களை முழுக்க முழுக்க மகிழ்விக்கும் படமாக இருக்கும். இதில் புதிய அம்சம் என்ன இருக்கிறது என்று கேட்டால், வரலாற்று பின்னணியில் உருவான திகில் கதைகள் தமிழில் ஏராளமாக வந்திருக்கிறது. 'காஞ்சனா' சீரிஸ் படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில் இந்தப் படம் திகில் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும். அதற்காக திரைக்கதையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து  இருக்கிறோம்.

 

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ராணி கதாபாத்திரம் வருகிறது. நிறைய ராணி கதைகளை நாம் பார்த்திருக்கிறோம். இந்த ராணி சற்று வித்தியாசமாக இருப்பார். ராணி கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று யோசித்தபோது சன்னி லியோன் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. கதை எழுதும் போதும் அவர்தான் என்னுடைய முதல் தேர்வாக இருந்தார்.

 

சன்னி லியோனை மும்பையில் சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவர் சொன்ன முதல் நிபந்தனை 'எனக்கு ஆங்கிலத்தில் கதை சொல்ல வேண்டும்' என்றார். அதற்காக நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் கதை சொன்னேன். அவருக்கு புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் நான் கதை சொல்லும்போது ஆர்வத்தோடு ரசித்து கேட்டார்.

 

அது மட்டுமல்ல, 'நான் நடித்த படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும்' என்று சொன்னார். படப்பிடிப்பில்  அவருடைய முழு ஒத்துழைப்பு கிடைத்தது. காலையில் 9:00 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அதற்கு முன்பாகவே ஒப்பனை செய்து கொண்டு ஆயத்தமாக வந்து விடுவார்.

 

ஒருமுறை கேராவேனை விட்டு வெளியே வந்து விட்டால் அன்றைய காட்சிகள் முழுவதையும் நடித்து கொடுத்த பிறகே மீண்டும் கேராவேனுக்குள் செல்வார். ஒரு நாளின் துவக்கத்தில் இருக்கும் அதே உற்சாகம் நாள் முழுவதும் அவரிடத்தில் இருப்பதை பார்க்க முடியும். 

 

எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அந்த காட்சிக்கு அதிகபட்ச உழைப்பைக் கொடுக்க ஆயத்தமாக இருப்பார். அதேபோல், படப்பிடிப்பில் தானே வசனம் பேசி நடிப்பேன் என்றும் சொல்வார். அதனால், அவருக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ் சொல்லிக்கொடுத்தோம். அதை சரியாக புரிந்துக்கொண்டு படப்பிடிப்பில் வசனங்களை அவரே பேசினார்.

 

யோகி பாபு பிளாஷ்பேக் காட்சிகளில் மன்னர் காலத்தில் வருகின்ற ஒரு மந்திரி கதாபாத்திரம் செய்திருக்கிறார். சதீஷ் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். அவருடைய கதாபாத்திரம் மிகவும் புதியதாக இருக்கும். இவர்களுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

Oh My Ghost

 

இது முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்விக்கும் படமாகவும் விஷுவலுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடிய படமாக இருக்கும். இது பிளாக் காமெடி படமாக இருந்தாலும் குலுங்கி குலுங்கி சிரிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் அதிகம் இடம்பெற்ற படமாக  இருக்கும்.

 

சன்னி லியோன் என்றா வேறு ஒரு இமேஜ் ரசிகர்களிடத்தில் இருக்கும். அந்த இமேஜுக்காக வரை நாங்கள் நடிக்க வைக்கவில்லை. அவர் இந்த கதாப்பாத்திரத்திற்கு மிக பொருத்தமாக இருப்பார், அதனால் தான் நடிக்க வைத்தோம். அதே சமயம், அவருடைய அந்த இமேஜை ரசிகர்கள் ரசிக்கும் வையில், படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். இந்த படம் இளைஞர்களுக்கான படமாக மட்டும் இருக்காது, பெண்கள் ரசிக்கும்படியான ஒரு ஜாலியான படமாக இருக்கும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் வீரசக்தி மற்றும் சசிகுமார் படம் குறித்து கூறுகையில், “அதிக பொருட்செலவில் இந்தப் படத்தை நாங்கள் தயாரித்து உள்ளோம். வரலாற்று பின்னணி படம் என்றாலே பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தை நாங்கள் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளோம்.

 

பாலிவுட் ஸ்டார் சன்னி லியோன் ஒரு மிகப்பெரிய நடிகை. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதனால் வெளிப்புற படப்பிடிப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒரு விஷயமாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை மும்பையில் பல அரங்குகளை அமைத்து படமாக்கினோம். தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் அவரை நடிக்க அழைத்தபோது அவர் ஏன் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று அவரை நேரில் சந்தித்தபோது தெரிந்தது. 

 

இந்தப் படத்தின் கதையை கேட்கும்போது எங்களுடைய நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் அவருக்கு பிடித்திருந்த காரணத்தினால் உடனே நடிக்க சம்மதித்தார். படப்பிடிப்புக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்ததோடு படத்தின் எல்லா விதமான புரமோஷனுக்கும் வருவதாக சொல்லி இருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சன்னி லியோனை தமிழ் சினிமா கொண்டாடும்.” என்றார்கள்.

 

Oh My Ghost

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள தயாரிப்பு தரப்பு விரைவில் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

Related News

8513

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery