நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் மூத்த நடிகைகள் மட்டும் இன்றி இளம் நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைப்படங்களில் இளம் நாயகியாக கலக்கி வரும் கல்யாணி பிரியதர்ஷினி, கதையின் நாயகியாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
’சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை தி ரூட் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் சுதன் சுந்தரம் இணைந்து தயாரிக்கின்றன. மனு சி.குமார் இயக்கும் இப்படத்திற்கு ஹேஷாம் வஹாப் இசையமைக்கிறார். சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்கிறார். நிமேஷ் தானுர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் பிற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட மற்ற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...