‘8 தோட்டக்கள்’, ‘ஜீவி’ படங்களின் ஹீரோ வெற்றி மற்றும் பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கும் படம் ‘இரவு’. ‘பக்ரீத்’ படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்கும் இப்படத்தை எம்10 புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.முருகானந்தம் தயாரிக்கிறார்.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் வெற்றி, இப்படத்தின் மூலம் முதல் முறையாக கோஸ்ட் திரில்லர் டிராமா ஜானர் படத்தில் நடிக்கிறார்.
வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க்கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாக கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீனிவாஸ் தயாநிதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கிறார். சி.எஸ்.பிரேம் குமார் எடிட்டிங் செய்ய, கே.மதன்குமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஞானகரவேல், கார்த்திக் நேதா, கருணாகரன் ஆகியோர் பாடல்கள் எழுத, ஃபயர் கார்த்திக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். பாபா பாஸ்கர் நடன காட்சிகளை வடிவமைக்கிறார்.
ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈ சி ஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...