Latest News :

’டிரிக்கர்’ படம் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் - இயக்குநர் சாம் ஆண்டன் நம்பிக்கை
Monday September-12 2022

’டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ‘100’, ‘கூர்கா’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிரிக்கர்’. 100 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சாம் ஆண்டன் மற்றும் அதர்வா இணையும் இரண்டாவது திரைப்படமான இப்படத்தை பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

 

இதில் அதர்வாவுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.  அப்பா வேடத்தில் அருண் பாண்டியன் நடித்திருக்கிறார். படத்தின் முக்கிய வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் நடித்திருக்கிறார். அவரது வேடம் பவர் புல்லாக இருப்பதோடு, படத்திற்கு மிகப்பெரிய பலம் தரும் வகையிலும் இருக்குமாம்.

 

பிரபு தேவா நடித்த ‘லக்‌ஷ்மி’, மாதவன் நடித்த ‘மாறா’ ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்த பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக  உள்ளது. 

 

‘வீட்ல விசேஷம்’, ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், ‘டிரிக்கர்’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

 

படம் குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் கூறுகையில், “தயாரிப்பாளர் ஸ்ருதி மேடம் அவர்களை முதன் முறையாக சந்திக்கும் போது அவருடைய அணுகுமுறை மிகவும் மென்மையாக இருந்தது. அவரிடம் எப்படி சண்டை படத்தின் கதையை சொல்வது என்று யோசித்தேன். அதே வேளையில் அவர்கள் நிறுவனம் இந்தியில் வெளியான 'கமாண்டோ சீரிஸ்' தயாரிப்புகளில் பங்கு வகித்ததை அறிந்தேன். சில நாட்களுக்குப் பிறகு நாம் இந்தப் படத்தை தயாரிக்கலாம் என்றார்.

 

தயாரிப்பாளர்  ஸ்ருதி மேடத்திடமிருந்து மிகச்சிறந்த ஒத்துழைப்பு கிடைத்தது. நான் பணியாற்றிய படங்களில் மிகச் சிறந்த தயாரிப்பாளர் ஸ்ருதி மேடம். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இந்தப் படத்துக்கு என்று ஒரு பட்ஜெட் இருந்தது. ஆனால் படம் எடுக்கும்போது கூடுதல் பட்ஜெட் தேவைப்படும் என்று தெரிந்தது. தயாரிப்பாளர் படம் சிறப்பாக வர வேண்டும் என்பதால் முழு சுதந்திரம் கொடுத்து அதிக முதலீடு செய்தார். அந்த வகையில் ஸ்ருதி மேடம், படக்குழுவைச் சேர்ந்த கோகுல் ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தயாரிப்பு நிறுவனம் என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்தார்கள், அதற்கு நியாயம் செய்திருப்பதாக நினைக்கிறேன்.

 

இது சண்டை படமாக இருந்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் இருக்கும். குழந்தை கடத்தல் கதை தமிழ் சினிமாவுக்கு புதியது அல்ல. ஆனால் யதார்த்த வாழ்க்கையில் எந்த அளவுக்கு இந்த மாதிரியான சம்பவங்கள்  தொடர்பு உடையதாக இருக்கிறது என்பதை உண்மைத் தன்மையோடு சொல்லி இருக்கிறோம். கதைக்காக பல ஆய்வுகளை செய்தோம். கடத்தப்படும் குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை உளவியல் பார்வையில் சொல்லி உள்ளோம்.

 

போலீஸ் துறையில் அன்டர் கவர் ஆபீஸராக வருகிறார் அதர்வா. அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். அப்பா மகன் கதையான இதில் அருண்பாண்டியன் சார் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

 

அதர்வா சண்டைக் காட்சிக்காக அதிக மெனக்கடல் எடுத்தார். ஐந்து சண்டைக் காட்சிகள், ஒவ்வொன்றறையும் வித்தியாசமான கோணத்தில் சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன் கம்போஸ் பண்ணிக் கொடுத்தார்.

 

ஜிப்ரான் இசை படத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக இருக்கும். கிருஷ்ணன் வசந்த் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

படத்தின் உச்சகட்ட காட்சிகள் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஸ்ருதி கூறுகையில், “பிரபு தேவா நடித்த 'லஷ்மி', மாதவன் நடித்த 'மாறா' போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு நாங்கள் தயாரிக்கும் படம் 'டிரிக்கர்'. எங்களுடைய முந்தையப் படங்களை மென்மையான கதைக் களத்தோடு தயாரித்தோம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

தனிப்பட்ட விதத்தில் எனக்கு சண்டை படங்கள் அதிகம் பிடிக்கும். எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்புக்காக கதைகளை கேட்டபோது இயக்குநர் சாம் ஆன்டன் சொல்லிய கதை பிடித்திருந்ததால் உடனே தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தோம். அதிக பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்துள்ளோம். இந்தப் படம் அதர்வா சினிமா பயணத்தில் முக்கியமான படமாக அமையும். அதர்வா கடினமான உழைப்பைக் கொடுத்தார். சண்டைக் காட்சிகள் அதர்வாவுக்கு பொருந்திப் போகும் அளவுக்கு கச்சிதமாக இருக்கும்.

 

டிரிக்கர் படம், சண்டை படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்.” என்றார்.

Related News

8518

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery