Latest News :

விஜய் டிவி செய்த துரோகம் - மக்களிடம் முன் வைத்த சுஜா!
Tuesday October-03 2017

விஜய் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பகுதி முடிந்துள்ள நிலையில், அந்த டிவி சேனல் தனக்கு செய்த துரோகம் குறித்து நடிகை சுஜா வாருணி, மக்களிடம் தெரிவித்துள்ளார்.

 

நிகழ்ச்சியின் நூறாவது நாளான கடைசி நாளில், கமல் அனைத்து பிக் பாஸ் உறுப்பினர்களையும் கடைசி நாள் மேடையில் அழைத்து வரவேற்பு செய்து வைக்கும் பொழுது சுஜா அவர்களால் ஒழுங்காக நடக்க முடியவில்லை. காரணம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கால் அவரது காலில் ஏற்பட்ட காயத்தின் வலி குறையாமல் இருந்தது.

 

அதே சமயம், மேடையில் நடனம் ஆடும் பொழுதும் சுஜா வாருணி, அரங்கமே அதிரும்படி ஆடி அசத்தினார். இதை நோட் செய்த ரசிகர்கள், சமூக வலைதளத்தில் சுஜாவை வருத்தெடுத்துவிட்டனர்.

 

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துள்ள சுஜா, இரண்டும் வெவ்வேறு நாட்களில் படமாக்கப்பட்டது. ஆனால் விஜய் டிவி-யின் எடிட்டிங் திறமையால அதை மாற்றி, எனக்கு ரசிகர்களிடம் கெட்ட பெயர் வாங்கி கொடுத்துவிட்டார்கள், என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related News

852

’G2’-இன் அடுத்த அத்தியாயத்தில் இணைந்த நடிகை வாமிகா கபி!
Thursday January-09 2025

வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Thursday January-09 2025

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...

”மலையாளத்தில் கூட எனக்கு இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கவில்லை” - நடிகர் ஷேன் நிகம் மகிழ்ச்சி
Tuesday January-07 2025

பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...

Recent Gallery