தொலைக்காட்சி நடிகர்கள் சினிமாவுக்குள் நுழைவது போல், வெள்ளித்திரை ஹீரோக்கள் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் நடிகர் ஜீவாவும் நிகழ்ச்சி தொகுப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஆனால், அவருடைய இந்த புதிய அவதாரம் தொலைக்காட்சிக்காக அல்ல, ஒடிடிதளத்திற்காக. ஆம், ஆஹ தமிழ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் கேம் ஷோ ஒன்றை நடிகர் ஜீவா தொகுத்து வழங்க உள்ளார்.
‘சர்க்கார் வித் ஜீவா’ என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள இந்த ரியாலிட்டி கேம் ஷோவின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்டு ரியாலிட்டி கேம் ஷோ குறித்து பேசிய நடிகர் ஜீவா, “எல்லோரும் SMS பட ஜீவாவை மீண்டும் எப்போது பார்க்கலாம் என்று கேட்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் என்னை மீண்டும் அப்படி பார்ப்பது மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் விளையாட்டின் விதிகளை வளைக்கும் ஆற்றலுடன் இயங்கும், ஒரு இனிமையான தொகுப்பாளராகவும் பார்ப்பார்கள். சர்க்கார் எனும் இந்த கேம் ஷோவினை நான் மிகவும் ரசித்தேன், என் ரசிகர்களும் இதை விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.
இந்த கேம் ஷோவில் பெரும் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் விரும்பும் பிரபலங்களான யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் வைபவ் ஆகியோர் முதல் எபிசோடை துவங்கி வைப்பது ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது. கேள்வி பதில் அடிப்படையிலான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவார்கள், 10 சுற்று கேள்விகளுக்கு ஏலம் விடுவார்கள். நட்சத்திரங்களைப் பற்றி இதுவரை கேள்விப்படாத ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட கேள்விகளுடன் பொழுதுபோக்கும் கலந்து, இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய விருந்தை உறுதியளிக்கிறது.
ஆஹா தளத்தின் CEO, அஜித் தாக்கூர் கூருகையில், “ஆஹா அதன் பார்வையாளர்களுக்கு 100% உள்ளூர் பொழுதுபோக்குகளை மிக உயர்ந்த தரத்துடன் வழங்க உறுதி எடுத்துள்ளது. நேர்த்தியான மாறுபட்ட அனுபவத்துடன் கூடிய ரியாலிட்டி ஷோக்களை உருவாக்குதில் ஆஹா சிறந்து விளங்குகிறது. உலகெங்கிலும் உள்ள தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த ‘கேம் ஷோக்களை’ வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முழுமையான பொழுது போக்கும் அசத்தலான வேடிக்கையுடனும் நடிகர் ஜீவா 52 நட்சத்திரங்கள் கலந்து கொள்ள 13 வார நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவுள்ளார்.” என்றார்.
தமிழுக்கென பிரத்யேகமாக மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களை ஆஹா உருவாக்கி வருவது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு இந்தியன் ஐடல் நந்தமூரி பாலகிருஷ்ணா வழங்கும் தெலுங்கில் அன்ஸ்டாப்பபிள்ஸ் வித் NBK, சமந்தாவுடன் SAMJAM போன்ற பிரமாண்ட ஷோ வை போல், இந்த ஷோவும் பிரமாண்டமானதாக இருக்கும்.
தெலுங்கில் இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் ஆஹா, 100% உள்ளூர் பொழுதுபோக்கு OTT இயங்குதளம் என்கிற சிறப்பில், அதன் தமிழ் பதிப்பிற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது ஆஹா தமிழுக்கென பிரத்யேகமாக படைப்புகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது. தமிழின் முன்னணி நடிகர் ஜீவா, ஒவ்வொரு வாரமும் 4 பிரபலங்கள் விளையாடும் இந்த தனித்துவமான கேம் ஷோவில் தொகுப்பாளராக தனது OTT அறிமுகத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...