சிலம்பரசன், கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரது வெற்றி கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதோடு, படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரியும் என்று திரையுலகினர் கணித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பல திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டது. குறிப்பாக அதிகாலை 5 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்பனையாகியிருப்பது கோலிவுட்டையே வியக்க வைத்திருக்கிறது.
‘மாநாடு’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மிகப்பெரிய வெற்றியை சிலம்பரசன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கொடுப்பார், என்ற நம்பிக்கையில் கோலிவுட் இருக்கிறது. இதற்காகவே இப்படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்க, டிக்கெட் முன்பதிவு தற்போது அதை நிரூபித்துள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பாகவே படம் மிகப்பெரிய வசூலை ஈட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இத்தகைய வரவேற்பையும், சிலம்பரசனின் மாஸையும் பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டே வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.
வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ், பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவடும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...