Latest News :

’டிரிக்கர்’ புதிய அனுபவத்தை கொடுக்கும் - மாணவிகள் முன்பு அதர்வா பேச்சு
Wednesday September-14 2022

‘100’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சாம் ஆண்டன் - நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘டிரிக்கர்’. பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் சுருதி நல்லப்பா வழங்கும் இப்படம் பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

 

வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, சென்னையில் உள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ‘டிரிக்கர்’ படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

 

விழாவில் நடிகர் அதர்வா பேசுகையில், “இங்கு கல்லூரியில் உங்களின் உற்சாகத்தை பார்க்கும் போது, எனக்கு என் கல்லூரி நாட்கள் ஞாபகம் வருகிறது. மீண்டும் கல்லூரி செல்ல ஆசையாக இருக்கிறது. எங்கள் படத்தை உங்களிடம் கொண்டு வருவது மகிழ்ச்சி. உங்களுக்கு பிடிக்கும்படியாக ஒரு நல்ல படம் செய்துள்ளோம். 100 படத்திற்கு பிறகு மீண்டும் திரில்லர் என்ற போது யோசித்தேன் ஆனால் இந்தப்படத்தின் கதை மிக புதுமையாக இருந்தது. நான் வழக்கமான பாத்திரங்களிலிருந்து மாறுபட்டு நடித்திருக்கிறேன். இப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும் அனைவரும் பாருங்கள் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் சாம் ஆண்டன் பேசுகையில், “நீங்கள் அனைவரும் அதர்வாவை ரசிக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. எங்கள் பட வெளியீட்டை ஒட்டி  இங்கு  உங்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ட்ரிகர் ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். 100 படம் எடுக்கும்போதே அதர்வா விடம் மீண்டும் படம் செய்ய பேசியிருந்தேன். அதர்வாவுடன் வேலை செய்வது மிக எளிது. அவர் கடினமான உழைப்பாளி. இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. நீங்கள் அனைவரும் தியேட்டரில் இந்தப்படத்தை பாருங்கள் நன்றி.” என்றார்.

 

Trigger Team in Jain College

 

தயாரிப்பாளர்  சுருதி நல்லப்பா பேசுகையில், “எங்கள் படத்தினை பற்றி உங்கள் முன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. இப்படத்தினை பற்றி முதன் முதலில் இயக்குநர் சாம் ஆண்டன் கூறியபோது கதை மிகவும் பிடித்திருந்தது. அதர்வா நடிக்க ஒப்புக்கொண்டதாக சொன்னவுடன் உடனே தயாரிக்க ஒப்புக்கொண்டேன். படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகிறது நீங்கள் அனைவரும் தியேட்டரில் படம் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்.” என்றார்.

 

பின்னர் கல்லூரி மாணவிகள் சார்பில் அதர்வா மற்றும் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டதோடு, மாணவிகள் அதர்வா உள்ளிட்ட ‘டிரிக்கர்’ படக்குழுவினருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

 

’ட்ரிகர்’ திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். அருண் பாண்டியன், சீதா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் மற்றும் இன்னும் பல முக்கிய நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 

 

ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். திலீப் சுப்பராயன் ஆக்‌ஷன் கோரியோகிராஃபராக பணியாற்ற, ராஜேஷ் கலை இயக்கம் செய்துள்ளார்.

Related News

8525

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery