கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கு முதல் திரைப்படத்தில் விதார்த் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.
புலனாய்வு விசாரணை பாணியிலான கிரைம் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்கிறார். தினேஷ் சுப்புராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
மூன்று கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, முதல் கட்டப்படப்பிடிப்பை இன்று சென்னையில் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...